இரஞ்சித் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரஞ்சித்
பிறப்பு5 செப்டம்பர் 1964 (1964-09-05) (அகவை 59)
பாலுசேரி, கோழிக்கோடு, கேரளம்
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சிறீஜா இரஞ்சித்
பிள்ளைகள்அக்னிவேசு இரஞ்சித்
அசுவகோசு இரஞ்சித்

இரஞ்சித் பாலகிருஷ்ணன் (Ranjith Balakrishnan) (பிறப்பு: செப்டம்பர் 5, 1964) ஒரு மூத்த இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும், மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றும் நடிகருமாவார். 2001 ஆம் ஆண்டில் வெளியான "தேவாசுரம்" படத்தின் தொடர்ச்சியாக "இராவணப்பிரபு" என்ற படத்தில் இவர் இயக்குநராக அறிமுகமானார். இவரது படங்களான "திரக்கதா" மற்றும் "இந்தியன் ரூபாய்" முறையே 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதினை வென்றன.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இரஞ்சித் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பாலுசேரியில் பிறந்தார். 1985 ஆம் ஆண்டில் திருச்சூரில் அமைந்துள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "56th National Film Awards" பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம். Public Information Bureau. Retrieved 2 March 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஞ்சித்_(இயக்குநர்)&oldid=3505804" இலிருந்து மீள்விக்கப்பட்டது