இரஞ்சித் விலாசு அரண்மனை
இரஞ்சித் விலாசு அரண்மனை (Ranjit Vilas Palace) இந்தியாவின் குசராத்து மாநிலம் இராச்கோட்டு நகரில் உள்ளது. இங்கு முந்தைய இராச்கோட்டு மாநிலத்தின் அரச குடும்பத்தினர் வசித்தனர்.
வரலாறு
[தொகு]இரஞ்சித் விலாசு 1870 ஆம் ஆண்டு இராச்கோட்டின் அப்போதைய தாக்கூர் சாகிப் பவாசிராச் மெகர்மான்சின்சியால் கட்டப்பட்டது. 1847 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தைத் தொடர்ந்து பஞ்ச நிவாரண கணக்கெடுப்பு நடவடிக்கையாக அரண்மனையின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. இரஞ்சித் விலாசுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, அரச இல்லமாக துர்பர்கத்து அரண்மனை இருந்தது. அதன் பிறகு இராச்கோட்டு மாநிலத்தின் அலுவலகங்கள் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு , குசராத்து அரசாங்கத்தின் அலுவலகங்கள் தொடர்ந்தன. [1] [2] [3]
இடம் மற்றும் கட்டிடக்கலை
[தொகு]இராச்கோட்டின் அரண்மனை சாலையில் இரஞ்சித் விலாசு அரண்மனை அமைந்துள்ளது. இதன் தோட்டம் 225 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கோதிக் பாணியில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஆறு ஏக்கர் பரப்பளவில் 100 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனை வாகனக் கொட்டகையில் இராச்கோட்டு மாநிலத்தின் விண்டேச்சு வாகனங்களின் தொகுப்பு உள்ளது. [4] அரண்மனை வளாகத்தில் ஆசாபுரா மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஒன்றும் உள்ளது.
சமீபத்திய வரலாறு
[தொகு]தற்பொழுதும் அரண்மனை இராச்கோட்டின் அரச குடும்பத்தின் வசிப்பிடமாக தொடர்கிறது. பாரம்பரிய உணவு விடுதிகளாக பொதுமக்களுக்கு திறக்கப்படாத பழைய ஆளும் குடும்பங்களின் சில அரண்மனைகளில் இதுவும் ஒன்றாகும். அரச குடும்பம் சம்பந்தப்பட்ட குடும்ப மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் இங்கு நடைபேறுகின்றன. [5] [6] [7] [8] [9] 2020 ஆம் ஆண்டில், இராச்கோட்டின் தற்போதைய தாகூர் சாகிப் மந்ததாசிங் சடேசாவின் முடிசூட்டு விழா இங்கு நடந்தது. இவர் தனது தந்தை மனோகர்சிங்சி பிரத்யுமன்சின்சிங்சிக்குப் பிறகு பதவியேற்றார். [10] [11] சடேசாவிற்கும் அவரது சகோதரிக்கும் இடையே நிலவும் சொத்து தகராறில் அரண்மையும் ஒரு பகுதியாகும். [12] [13] இராச்கோட்டில் உள்ள புதிய பன்னாட்டு விமான நிலையத்தின் முகப்பு வடிவமைப்பு, கட்டிடங்களின் உள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் இரஞ்சித் விலாசு அரண்மனையில் உள்ள அணியச்சு வேலைகளால் ஈர்க்கப்பட்டு இவ்வழிமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. [14] [15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The lavish lifestyle of India's royalty". BBC News. 6 March 2015. https://www.bbc.com/news/magazine-31709924.
- ↑ "Rajkot: Durbargadh set to be converted into a museum". The Indian Express. 21 January 2020. https://indianexpress.com/article/cities/rajkot/rajkot-durbargadh-to-be-converted-into-a-museum-6227518/.
- ↑ "নির্মাণের নেপথ্যে খরা, ১০০ কক্ষের এই প্রাসাদেই সপরিবার থাকেন ‘রাজা’ মান্ধাতা সিংহ". www.anandabazar.com. 23 February 2021. https://www.anandabazar.com/india/ranjit-vilas-palace-in-rajkot-is-still-the-home-to-the-present-royal-family-dgtl-photogallery/cid/1267946?slide=16.
- ↑ Katariya, Meenu (12 December 2020). "A Sneak Peek At 10 Royal Families Of India That Still Live Lavishly In Palaces". www.scoopwhoop.com (in English). பார்க்கப்பட்ட நாள் 9 September 2022.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Ahead of assembly polls, BJP to woo Kshatriyas in Rajkot | Rajkot News - Times of India" (in en). The Times of India. 2 April 2022. https://timesofindia.indiatimes.com/city/rajkot/ahead-of-assembly-polls-bjp-to-woo-kshatriyas-in-rajkot/articleshow/90604025.cms.
- ↑ "Where India’s royal families are today, from the Mewars to the Pataudi clan" (in en). South China Morning Post. 29 July 2021. https://www.scmp.com/magazines/style/luxury/article/3142877/indias-royal-families-today-bollywood-actor-saif-ali-khan.
- ↑ "The Royal family of Rajkot" (in en). The Times of India. 29 July 2020. https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/indian-royal-families-that-continue-to-live-a-majestic-life/photostory/77236736.cms?picid=77236756.
- ↑ "City to witness its erstwhile royal glory | Rajkot News - Times of India" (in en). The Times of India. 21 January 2015. https://timesofindia.indiatimes.com/city/rajkot/city-to-witness-its-erstwhile-royal-glory/articleshow/45966542.cms.
- ↑ "Royal wedding takes city down the nostalgic lane | Rajkot News - Times of India" (in en). The Times of India. 11 January 2012. https://timesofindia.indiatimes.com/city/rajkot/royal-wedding-takes-city-down-the-nostalgic-lane/articleshow/11444365.cms.
- ↑ "A Royal Affair" (in en). India Today. 14 February 2020. https://www.indiatoday.in/magazine/nation/story/20200224-a-royalaffair-1646143-2020-02-14.
- ↑ "Ex-Guj finance minister Manoharsinh Jadeja dead | India News - Times of India" (in en). The Times of India. 27 September 2018. http://timesofindia.indiatimes.com/articleshow/65985092.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst.
- ↑ "Rajkot royal family's bitter property dispute, Rs 4,500 crore at stake!" (in en). Zee News. 12 October 2021. https://zeenews.india.com/india/rajkot-royal-familys-bitter-property-dispute-rs-4500-crore-at-stake-2402034.html.
- ↑ "Rajkot royal family dispute: शाही महल, बेशकीमती गहने और विंटेज कार... भाई-बहन के बीच 4,500 करोड़ रुपये का प्रॉपर्टी विवाद" (in hi). Navbharat Times. 12 October 2021. https://navbharattimes.indiatimes.com/state/gujarat/other-cities/rajkot-king-madhantasinh-and-his-sister-fight-for-over-rs-4500-cr-property-of-ranjit-vilas-palace/articleshow/86963197.cms.
- ↑ "New airport for Rajkot, international flights likely in future | Rajkot News - Times of India" (in en). The Times of India. 10 June 2022. https://timesofindia.indiatimes.com/city/rajkot/new-airport-for-rajkot-international-flights-likely-in-future/articleshow/92131104.cms.
- ↑ "AAI starts construction work at Rs 1405-crore Rajkot greenfield airport" (in en). TimesNow. 10 June 2022. https://www.timesnownews.com/business-economy/industry/aai-starts-construction-work-at-rs-1405-crore-rajkot-greenfield-airport-article-92125178.