உள்ளடக்கத்துக்குச் செல்

இரஞ்சித் பண்டார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரஞ்சித் பண்டார
Ranjith Bandara
රංජිත් බණ්ඩාර
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
தொகுதிதேசியப் பட்டியல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராசபக்ச வாசல தென்னகோன் முடியன்சேலாகே ரஞ்சித் பண்டார

4 நவம்பர் 1961 (1961-11-04) (அகவை 64)
அரசியல் கட்சிஇலங்கை பொதுசன முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கை மக்கள் சுதந்திரக் கூட்டணி
முன்னாள் மாணவர்பேராதனைப் பல்கலைக்கழகம்
கொழும்பு பல்கலைக்கழகம்
நார்வே விவசாயப் பல்கலைக்கழகம், குயின்சுலாந்து பல்கலைக்கழகம்
பணிகல்வியாளர்

இரஞ்சித் பண்டார (Ranjith Bandara) என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். கல்வியாளர், அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பன்முகங்களுடன் இயங்கினார். இராசபக்ச வாசல தென்னகோன் முடியன்சேலாகே ரஞ்சித் பண்டார என்பது இவருடைய முழுப்பெயராகும்.[1]

இரஞ்சித் பண்டார 1961 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பிறந்தார்.[2] சிறிமல்வத்த ராசகீய வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டத்தையும் (1990), கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டத்தையும் (1992) பெற்றுள்ளார்.[2][3] மேலும், நார்வே விவசாயப் பல்கலைக்கழகத்திலிருந்து இயற்கை வள மேலாண்மை மற்றும் நிலையான விவசாயம் சார்ந்த முதுவிஞ்ஞானப் பட்டத்தையும் (1995), குயின்சுலாந்து பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்தையும் (2003) பெற்றுள்ளார்.[2][3][4]

இரஞ்சித் பண்டார, பேராசிரியராகப் பதவி ஏற்பதற்கு முன்பு, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[2][3][4] இவர் இலங்கையைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.[2][4] 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை மக்கள் சுதந்திரக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு இவர் நியமிக்கப்பட்டார்.[5][6][7]

மனித-யானை மோதலின் பொருளாதாரம்* எனும் நூலை இரஞ்சித் பண்டார எழுதியுள்ளார். தேசிய கால்நடை மேம்பாட்டுச் சபை, இலங்கை-லிபியா விவசாய மற்றும் கால்நடை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இலங்கை வணிக வங்கி ஆகியவற்றில் இயக்குநராகப் பணியாற்றினார்.[2][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Directory of Members: Ranjith Bandara". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: Parliament of Sri Lanka. Retrieved 7 September 2020.
  2. 1 2 3 4 5 6 Prematunge, Sajitha (26 August 2007). "All for the love of elephants: Dr. Ranjith Bandara and his concern for the human-elephant conflict". Sunday Observer (Sri Lanka) (Colombo, Sri Lanka). https://archives.sundayobserver.lk/2007/08/26/spe01.asp.
  3. 1 2 3 "Professor Ranjith Bandara". Colombo, Sri Lanka: University of Colombo. Retrieved 7 September 2020.
  4. 1 2 3 4 "Meet your new parliamentarians". The Sunday Times (Sri Lanka) (Colombo, Sri Lanka). 23 August 2020. http://www.sundaytimes.lk/200823/news/meet-your-new-parliamentarians-2-413457.html. பார்த்த நாள்: 7 September 2020.
  5. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections - 2020 - Declaration under Article 99A of the Constitution" (PDF). The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka Extraordinary. No. 2188/2. Colombo, Sri Lanka. 10 August 2020. p. 2A. Archived from the original (PDF) on 31 October 2020. Retrieved 11 August 2020.
  6. "SLPP National List goes to EC". Daily FT (Colombo, Sri Lanka). 8 August 2020. http://www.ft.lk/front-page/SLPP-National-List-goes-to-EC/44-704302. பார்த்த நாள்: 7 September 2020.
  7. "SLPP releases National list". Sunday Observer (Sri Lanka) (Colombo, Sri Lanka). 7 August 2020. http://archives1.sundayobserver.lk/2020/08/07/news/slpp-releases-national-list.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஞ்சித்_பண்டார&oldid=4544056" இலிருந்து மீள்விக்கப்பட்டது