உள்ளடக்கத்துக்குச் செல்

இரஞ்சன் ராய் டேனியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரஞ்சன் ராய் டேனியல் (Ranjan Roy Daniel) (11 ஆகத்து 1923 – 27 மார்ச்சு 2005) நாகர்கோவிலில் பிறந்த இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் அண்டக் கதிர் மற்றும் விண் இயற்பியல் துறைகளில் பணிபுரிந்தவர் ஆவார். இவர் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் ஆவார்.[1] 1976 ஆம் ஆண்டில் இவர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மை ஆலோசகராகப் பணியாற்றினார். இவர் ஓமி பாபாவுடன் இணைந்து அண்டவியல் கதிர்கள் பற்றிய தளத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார்.[2]

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் இவரது பங்களிப்புகளுக்காக 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசால் சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stephens, S. A. (10 October 2005), "Ranjan Roy Daniel (1923–2005)" பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம், Current Science, Vol. 89, No. 7, pp. 1277–1279, இந்திய அறிவியல் நிறுவனம் IISC.
  2. Daniel, Ranjan Roy (ed.) (1964). Proceedings: Modulation. International Union of Pure and Applied Physics. Cosmic Ray Commission, India. Dept. of Atomic Energy.
  3. "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 மே 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஞ்சன்_ராய்_டேனியல்&oldid=4053204" இலிருந்து மீள்விக்கப்பட்டது