இரஞ்சனி (நடிகை)
தோற்றம்
இரஞ்சனி | |
|---|---|
| பிறப்பு | சாசா செல்வராஜ் 1970 (அகவை 54–55) சிங்கப்பூர் |
| தேசியம் | சிங்கப்பூரியன் |
| பணி | திரைப்பட நடிகை வழக்குரைஞர் தொழிலதிபர் |
| செயற்பாட்டுக் காலம் | 1985-1992 2014- தற்போது |
இரஞ்சனி என்றறியப்படும் சாசா செல்வராஜ் சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆவது ஆண்டில் வெளியான முதல் மரியாதை திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார்.[1]
1987 ஆவது ஆண்டில் லெனின் இராசேந்திரன் இயக்கத்தில் வெளியான சுவாதி திருநாள் திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பிரியதர்சன் எழுதி இயக்கிய சித்திரம் திரைப்படத்தில் நடித்தார். மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்த எல்லாத் திரைப்படங்களும் வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றதால் இந்த இணை வெற்றி இணையெனப் பாராட்டப்பட்டது.[2]
திரைப்பட விபரம்
[தொகு]தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | எண் | திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குநர் |
|---|---|---|---|---|
| 1985 | 1 | முதல் மரியாதை | செவுலி | பாரதிராஜா |
| 1986 | 2 | அவளைச் சொல்லி குற்றமில்லை | ஏ. ஏ. சோமன் | |
| 3 | கடலோரக் கவிதைகள் | பாரதிராஜா | ||
| 4 | ஆயிரம் பூக்கள் மலரட்டும் | இ. இராமதாசு | ||
| 5 | பாரு பாரு பட்டணம் பாரு | மனோபாலா | ||
| 6 | நீதானா அந்தக் குயில் | |||
| 7 | நாளெல்லாம் பௌர்ணமி | |||
| 8 | மண்ணுக்குள் வைரம் | சித்தி | மனோஜ் குமார் | |
| 1987 | 9 | குடும்பம் ஒரு கோயில் | ஏ. சி. திருலோகச்சந்தர் | |
| 10 | ஆயுசு நூறு | பொன்மணி இராசன் | ||
| 11 | பாசம் ஒரு வேசம் | |||
| 12 | முத்துக்கள் மூன்று | ஏ. ஜெகந்நாதன் | ||
| 13 | பரிசம் போட்டாச்சு | கே. சோலைராசன் | ||
| 14 | அருள் தரும் ஐயப்பன் | தசரதன் | ||
| 15 | வெளிச்சம் | சுந்தர் கே. விசயன் | ||
| 1988 | 16 | தாய்மேல் ஆணை | எல். ராசா | |
| 17 | உரிமை கீதம் | கங்கா | ஆர். வி. உதயகுமார் | |
| 1989 | 18 | புது மாப்பிள்ளை | பி. எசு. சுப்பிரமணியம் | |
| 19 | பொருத்தது போதும் | பி. கலைமணி | ||
| 20 | நெருப்பு நிலா | |||
| 21 | சரியான ஜோடி | |||
| 22 | தில்லி பாபு | பாண்டியராஜன் | ||
| 23 | சகலகலா சம்மந்தி | விசு | ||
| 24 | எல்லாமே என் தங்கச்சி | விசு | ||
| 25 | சம்சாரமே சரணம் | ஜீவபாலன் | ||
| 1990 | 26 | கல்யாண ராசி | கே. சிவபுரசாத் | |
| 1991 | 27 | சார் ஐ லவ் யூ | லலிதா | ஜி. என். ரங்கராசன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Interview with Ranjini" (in Malayalam). Vanitha. http://indianterminal.com/forum/first-cut-first-show/71113-interview-with-chitram-fame-actress-ranjini.html. பார்த்த நாள்: 2018-03-23.
- ↑ People still call me Kalyani: Ranjini (Navamy Sudhish) 24 September 2013 [1]