இரஜத் பிரபாத்
தோற்றம்
| இரஜத் பிரபாத் வெள்ளி அருவி | |
|---|---|
இந்தியாவின் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள 107 மீட்டர் உயரமுள்ள வெள்ளி அருவி (இரஜத் பிரபாத்) | |
![]() | |
| அமைவிடம் | நர்மதாபுரம் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
| ஆள்கூறு | 22°27′07″N 78°26′42″E / 22.452°N 78.445°E |
| வகை | குதிரைவால் |
| மொத்த உயரம் | 107 மீட்டர்கள் (351 அடி) |
| வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
| நீர்வழி | அறியப்படவில்லை |
இரஜத் பிரபாத் (Rajat Prapat) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவி ஆகும். இது உயரத்தின் அடிப்படையில் இந்தியாவின் அருவிகளின் பட்டியலில் 30-ஆவது மிக உயர்ந்த அருவியாகும்.[1]
அருவி
[தொகு]இது 107 மீட்டர்கள் (351 அடி) உயரமுடைய செங்குத்து வீழ்ச்சியைக் கொண்ட குதிரைவால் வகை அருவியாகும்.[2]
பெயர்
[தொகு]சூரிய ஒளி இதன் மீது விழும்போது, இது வெள்ளி போல் பளபளக்கிறது. இதனால் இது 'இரஜத் பிரபாத்' என்று அழைக்கப்படுகிறது.[3] இந்தியில் 'இரஜத்' என்றால் வெள்ளி என்றும், 'பிரபாத்' என்றால் அருவி என்றும் பொருளாகும்.
அமைவிடம்
[தொகு]இரஜத் பிரபாத் அருவி, நர்மதாபுரம் மாவட்டத்தில் சாத்பூராவின் ராணி என்று அழைக்கப்படும் பச்மரி என்ற இடத்தில் அமைந்துள்ளது. அப்சரா விகாரிலிருந்து பாறைகள் மீது 10 நிமிடங்கள் நடந்தால் இந்த அருவியை அடையலாம்.[4]
இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-09-05. Retrieved 2010-06-20.
- ↑ "Rajat Prapat Falls". World Waterfall Database. Archived from the original on 11 June 2011. Retrieved 2010-07-01.
- ↑ "Pachmarhi – Rajat Prapat or Silver Falls". Dazzling India. Archived from the original on 6 October 2011. Retrieved 2010-07-01.
- ↑ "Rajat Prapat". india9. Retrieved 2010-07-01.
