உள்ளடக்கத்துக்குச் செல்

இரங்க்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரங்க்பூர் (ஆங்கிலம்: Rangpur; வங்காள மொழி : রংপুর) என்பது வங்காளதேசத்தின் ரங்க்பூர் பிரிவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். ரங்க்பூர் நகரம் 1769 ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று ரங்க்பூர் மாவட்ட தலைமையகமாக அறிவிக்கப்பட்டது. மேலும் 1869 ஆம் ஆண்டில் நகராட்சியாக நிறுவப்பட்டது. இது வங்காளதேசத்தின் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும்.[1][2]

நகராட்சி வங்காளதேசத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சமீபத்தில் நிறுவப்பட்ட வங்காளதேசத்தின் பொது பல்கலைக்கழகம் "பேகம் ரோக்கியா பல்கலைக்கழகம், ரங்க்பூர்" நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. முன்னதாக, பெரிய ரங்க்பூர் மாவட்டத்தின் தலைமையகமாக ரங்க்பூர் இருந்தது. பின்னர் பெரிய ரங்க்பூர் மாவட்டம் ரங்க்பூர், குரிகிராம், நில்பமாரி, லால்முனிர்காட் மற்றும் கெய்பந்தா மாவட்டங்களாக உடைக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

1575 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் அக்பரின் தளபதியான ராஜா மன் சிங்கின் படையினரால் ரங்க்பூர் கைப்பற்றப்பட்டது., ஆனால் 1686 ஆம் ஆண்டு வரை அது முகலாய சாம்ராஜ்யத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லை. பின்னர் ரங்க்பூர் கோரகாட்டின் "சார்க்கர்" கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் சன்யாசி கிளர்ச்சி நடந்தது.[3]

புவியியல்

[தொகு]

ரங்க்பூர் நகரம் பிரதேச தலைமையகமாகும். ஆண்டு மழைவீழ்ச்சி சராசரியாக 2931 மி.மீ. ஆகும். சுமார் 28 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ரங்க்பூர் நகரம் ககாட் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இது 1869 ஆம் ஆண்டில் மீண்டும் நகராட்சியாக மாற்றப்பட்டது. ரங்க்பூர் நகரக் கழகத்தின் சனத்தொகை 2017 ஆம் ஆண்டில் 7,96,556 ஆக இருந்தது. ஆண்கள் 49% வீதமும், பெண்கள் 51% வீதமும் காணப்படுகின்றனர். மக்களின் எழுத்தறிவு விகிதம் 61% ஆகும். 2010 ஆம் ஆண்டின் சனவரியில் ரங்க்பூர் பிரிவு நிறுவப்பட்ட பின்னர் பிரதேச நகரமாக ரங்க்பூர் நகரக் கழகம் நிறுவப்பட்டது.

காலநிலை

[தொகு]

கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் ரங்க்பூர் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையில் வகைப்படுத்தப்படுகின்றது. ரங்க்பூரின் காலநிலை பொதுவாக பருவமழை , அதிக வெப்பநிலை, கணிசமான ஈரப்பதம் மற்றும் அதிக மழையால் குறிக்கப்படுகிறது. சூடான பருவம் ஏப்ரலில் தொடக்கத்தில் தொடங்கி சூலை வரை தொடர்கிறது. ரங்க்பூரில் சராசரி ஆண்டு வெப்பநிலை 24.9 °C (76.8 °F) ஆகும். ஆண்டுதோறும் சுமார் 2,192 மிமீ (86.30 அங்குலம்) மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படும்.

பொருளாதாரம்

[தொகு]

இந்த நகரம் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கான வணிக மையமாக உள்ளது. நகர மையத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், குடியிருப்பு விடுதிகள், சீன மற்றும் இந்திய உணவகங்கள், துரித உணவு, இனிப்பு கடைகள், பரிசுக் கடை மற்றும் பல உள்ளன. இது உலகளாவிய நிலைப்பாட்டின் காரணமாக வங்காளதேசத்தின் மிக முக்கியமான பொருளாதார மண்டலங்களில் ஒன்றாகும்.

சுகாதாரம்

[தொகு]

ரங்க்பூர் வடக்கு வங்காள மாவட்டங்கள் முழுவதும் சுகாதார வசதிகளுக்காக நன்கு அறியப்பட்டிருக்கிறது. நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள், தனியார் சுகாதார மையங்கள், கண்டறியும் மையங்கள் அமைந்துள்ளன. ரங்க்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (ஆர்.எம்.சி.எச்), மூன்றாம் நிலை ஆயிரம் படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனை, பட்டதாரி மற்றும் முதுகலை மருத்துவக் கல்வியில் கற்பிக்கும் வசதியுடன் உள்ளது. ரங்க்பூர் மருத்துவக் கல்லூரியின் வளாகம் ரங்க்பூரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது ராஜ்ஷாஹி மாவட்டத்திலிருந்து 210 கிலோமீட்டர் தூரத்திலும், டாக்காவிலிருந்து 330 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது இந்தியாவை நேபாளத்துடன் இணைக்கும் நாடுகளுக்கிடையேயான நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. ""Journey to Rangpur City Corporation"". Archived from the original on 2015-06-17.
  2. "Rangpur | Bangladesh". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
  3. Lorenzen, David N. (January–March 1978). "Warrior Ascetics in Indian History". Journal of the American Oriental Society. 98 (1): 61–75. doi:10.2307/600151. JSTOR 600151.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரங்க்பூர்&oldid=3543934" இலிருந்து மீள்விக்கப்பட்டது