இரங்கோபண்டித அக்ராரம் வேணுகோபால சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரங்கோபண்டித அக்ராரம் வேணுகோபால சுவாமி கோயில்

இரங்கோபண்டித அக்ராரம் வேணுகோபால சுவாமி கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள பழமையான ஒரு கிருஷ்ணர் கோயிலாகும்.[1] இக்கோயில் ஒசூரில் உள்ள கோகுல் நகர் சாலையின் முடிவில் இரங்கோபண்டித அக்ராரம் என்ற பகுதியில் உள்ளது.

கோயில் சூழல்[தொகு]

இக்கோயில் அமைதியான இடத்தில் உள்ளது. இந்த கோயில் உள்ள இடம் இரங்கோபண்டித அக்ராரம் என அழைக்கப்படுகிறது. இந்த அக்ராரத்தின் மையத்தில் கோயில் அமைந்துள்ளது. அக்ராரம் என்று குறிப்பிட்டாலும் தற்போது இங்கு ஒரு வீடும் இல்லை அக்ராரத்தைச் சுற்றிலும் கோட்டை போன்ற மண்ணால் கட்டப்பட்ட மதில் சுவரின் எச்சங்கள் மற்றும் மதில் சுவருக்கு உட்பட்ட பகுதியில் வீடுகள் இருந்ததற்கான அடையாளமாக அடித்தள எச்சங்கள் உள்ளன. எந்தக் காலத்தில் இந்த ஊர் அழிந்தது என்பது தெரியவில்லை. இந்த ஊர் தற்போது இல்லாவிட்டாலும் வருவாய் துறை ஆவணங்களில் இப்பகுதியை இரங்கோபண்டித அக்ராரம் என்றே குறிப்பிடுகின்றன.[2] இந்தப் பகுதியை உள்ளூர் மக்கள் பாழ் அக்ராரம் என அழைக்கின்றனர்.

கோயிலமைப்பு[தொகு]

இந்தக் கோயில் அகனாழி, இடைநாழி, முன்னாழி முன் மண்டபம். ஆகியவற்றுடன் ஒற்றைப் பிரகாரத்துடன் அழகுற உள்ளது. அகனாழியில் வேணுகோபால சுவாமியின் இருபுறமும் இராதை ருக்மணி தேவியருடன் காட்சியளிக்கிறார். கோபாலனின் பாதங்களை பசு ஒன்று வருடிக் கொண்டிருப்பது போன்றும், வேணுகோபாலர் நான்கு கைகளுடன், பின்னிரு கைகளில் சங்கும், சங்கரமும் ஏந்தியும் முன்னிரு கைகளில் புல்லாங்குழலை ஏந்தியும் காட்சியளிக்கிறார். தலைக்கு மேலை ஆதிசேடன் குடையாக உள்ளார். ஆழ்வார்கள் உடனிருந்து கோபாலனை வணங்கியபடி உள்ளனர்.

சிறப்பு நாட்கள்[தொகு]

வைகுண்ட ஏகாதசியும். கோகுலாஷ்டமியும் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது,[3] கோயிலில் வருடாந்திர பூசை அக்டோபர் இரண்டாம் நாள் செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோகுலாஷ்டமி: கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடு". செய்தி. http://m.dailyhunt.in/news/india.+பார்த்த நாள் 7 சனவரி 2017.
  2. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்த்த நாள் 7 சனவரி 2017.
  3. "கோகுலாஷ்டமி: கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடு". செய்தி. தினமணி. பார்த்த நாள் 7 சனவரி 2017.