உள்ளடக்கத்துக்குச் செல்

இரங்கேச வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரங்கேச வெண்பா
நூலாசிரியர்பிறசை சாந்தக் கவிராயர்
உண்மையான தலைப்புநீதிசூடாமணி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தொடர்திருக்குறள் உரை நூல்கள்
பொருண்மைதிருக்குறள் விளக்கம் மற்றும் இதிகாசக் கதைகள்
வகைமுதுமொழி வெண்பா
வெளியீட்டாளர்மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை
வெளியிடப்பட்ட நாள்
1883
ஊடக வகைஅச்சு நூல்

இரங்கேச வெண்பா[1] அல்லது நீதிசூடாமணி என்று அழைக்கப்படும் இந்நூல், திருக்குறளை அடிப்படையாக எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை எழுதியவர் பிறசை சாந்தக் கவிராயர் ஆவார். 1907 ஆம் ஆண்டு இந்நூலுக்கு சு. அ. இராமசாமி புலவர் என்பர் உரையெழுதி உள்ளார். அதனால் அதற்கு முன்னர் இது படைக்கப்பட்டிருக்க வேண்டும்.[2]

இந்நூலில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற திருக்குறளிலுள்ள மூன்று பால்களிலும் வெண்பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

1 அறத்துப்பால்
1.1 பாயிர இயல்
1.2 இல்லற இயல்
1.3 துறவற இயல்
2 பொருட்பால்
2.1 அரசியல்
2.2 அமைச்சியல்
2.3 அங்க இயல்
2.4 ஒழிபியல்
3 காமத்துப் பால்
3.1 களவியல் (ஆண்பாற் கிளவிகள்)
3.2 கற்பியல் (பெண்பாற் கிளவிகள்)
3.3 அன்பியல்

இந்நூலில் ஒவ்வொரு திருக்குறளையும், இதிகாச புராணங்களுடன் இணைந்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் மற்றும் பதிப்பு

[தொகு]

இந்நூலின் ஆசிரியர் பிறசை சாந்தக் கவிராயர் ஆவார். இந்நூல் முதன்முதலாக 1883-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. பின்னர், 1907-ஆம் ஆண்டு சு. அ. இராமசாமி புலவர் இந்நூலுக்குப் புதிய விளக்கவுரை ஒன்றை எழுதியுள்ளார். தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதையர் இந்நூலைத் திருக்குறளின் செய்யுள் வடிவ உரை நூல்களுள் ஒன்றாகக் கருதுகிறார்.

நூலின் அமைப்பு

[தொகு]

இரங்கேச வெண்பா நூல் திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தழுவி, அதிகாரத்திற்கு ஒரு பாடல் வீதம் மொத்தம் 133 நேரிசை வெண்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற திருக்குறளின் மூன்று பால்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  • வெண்பாக்களின் முதலிரண்டு அடிகள் திருக்குறளின் கருத்துக்குப் பொருத்தமான மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசக் கதைகளை விளக்கி, "இரங்கேசா!" என்ற விளிச்சொல்லுடன் முடியும்.
  • வெண்பாக்களின் பின்னிரண்டு அடிகள் சம்பந்தப்பட்ட அதிகாரத்தின் ஒரு திருக்குறளை அப்படியே ஈற்றடியாகக் கொண்டு முடியும்.

பாயிரப் பாடல்

[தொகு]

ஆசிரியர் தனது பாயிரப் பாடலில், திருவரங்க நாதனை வணங்கித் திருக்குறளின் கருத்துகளைக் கதை மூலம் கூறப் போவதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

சீர்கொண்ட காவிரிசூழ் தென்னரங்கத் தெம்பிரான்
பார்கொண்ட தாளைப்பரவியே-வேர்கொண்டே
யோங்குபுகழ் வள்ளுவனா ரோதுகுறண் மூதுறையாப்
பாங்குபெறச் சொல்வேன் பரிந்து


மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=71
  2. பழனியப்பன், மு. (April 11, 2011). "இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி". வல்லமை.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரங்கேச_வெண்பா&oldid=4587981" இலிருந்து மீள்விக்கப்பட்டது