உள்ளடக்கத்துக்குச் செல்

இரங்கூன் மல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரங்கூன் மல்லி

இரங்கூன் மல்லி[1] (Combretum indicum) என்பது என்பது வெப்பமண்டல ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட சிவப்பு நிறப் பூக்களைக் கொண்ட ஒரு கொடியாகும். இருவித்திலைத் தாவரமான இது மலாய் நாட்டை சேர்ந்தது. இச்செடி, சுவர், தூண், கம்பம், தட்டி, செய்ற்கை வளைவு முதலியவற்றின் மீது பெரிய அளவில் கொடிபோல் படர்ந்து வளரக்கூடியது. தோட்டங்களிலும், சோலைகளிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. இரங்கூன் மல்லி, கடல் மட்ட இடங்களில், பூங்காக்களில் மிகுந்து காணப்படுகிறது.

இயல்புகள்

[தொகு]

இரங்கூன் மல்லி கொடியானது சுமார் 2.5 மீட்டர் முதல் 8 மீட்டர் வரை உயரம் வரை வளரக்கூடியது. இலைகள் நீள்வட்ட வடிவில் கூர்மையான முனை மற்றும் வட்டமான அடிப்பகுதியுடன் இருக்கும். இவை 7 முதல் 15 சென்டிமீட்டர் வரை வளரும். மேலும், இலையின் அமைவு எதிர்மாறாக இருக்கும். மலர்கள் மணமுடையன, குழல் வடிவின இவற்றின் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு வரை மாறுபடும். இதனுடைய கனி 30 முதல் 35 வரை மிமீ நீளத்துடன் நீள்வட்ட வடிவமானது. பழம் முதிர்ச்சியடையும் போது வாதுமை போன்ற சுவை கொண்டது.

இச்செடியின் மலர்கள் ஓரளவு பெரியதாகவும், வெள்ளை, ஆரஞ்சு,சிவப்பு ஆகிய வண்ணங்களில் காணப்படும். இது நிறம் மாறும் தன்மை கொண்டது. நீண்ட அல்லது முட்டை வடிவில் இலைகள் காணப்படும். இலை நரம்புகள் வலை அமைப்பு உடையது. மலர்கள் இருபாலானவை. புல்லிவட்ட இதழ்கள் 5 ஒன்று சேர்ந்து சூலப்பைக்கு மேல் குழாய் போன்று அமைந்துள்ளது. அல்லி வட்டம் 5 தனி இதழ்களால் ஆனது. 5 குட்டையான மகரந்தங்கள் உள்ளது.[2]

இரங்கூன் மல்லி கொடியானது பிலிப்பீன்சு, இந்தியா, பாக்கித்தான் மற்றும் மலேசியாவின் முட்காடுகளில் அல்லது இரண்டாம் நிலை காடுகளில் காணப்படுகிறது. இது வங்காளதேசம், மியான்மர், வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்பட்டு இயற்கையாக்கப்பட்டது.

பயன்கள்

[தொகு]

விதைகள் குடற்புழுக்கொல்லியாக பயன்படுகிறது. இலைச்சாறு வயிறு வீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடியது. வறுக்கப்பட்ட விதைகள் வைற்றுப்போக்கிற்கும், காய்ச்சலுக்கும், மருந்தாக பயப்படுகிறது. விதைகளை தேய்த்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உருளைப்புழு கோளாறு, ஊசிப்புழு நோய்த் தொற்று ஆகியவை நீங்கும்.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Eisikowitch, D.; Rotem, R. (1987). "Flower Orientation and Color Change in Quisqualis indica and Their Possible Role in Pollinator Partitioning". Botanical Gazette 148 (2): 175. doi:10.1086/337645. 
  2. Gamble,G.S. Flora of Madras Presidency BSI vol.I. 1957; George watt, Dictionary of products of India Vol.VI. 1972
  3. Excitotoxic cell death and delayed rescue in human neurons derived from NT2 cells, M Munir, L Lu and P Mcgonigl, Journal of Neuroscience, Vol 15, 7847–7860
  4. Glutamate cytotoxicity in a neuronal cell line is blocked by membrane depolarization. T. H. Murphy, R. L. Schnaar, J. T. Coyle and A. Sastre. Brain Research Volume 460, Issue 1, 13 September 1988, Pages 155–160
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரங்கூன்_மல்லி&oldid=3927346" இலிருந்து மீள்விக்கப்பட்டது