இரங்காசு மொழி
தோற்றம்
| இரங்காசு Rangas | |
|---|---|
| இரங்காசு | |
| நாடு(கள்) | இந்தியா |
| பிராந்தியம் | உத்தராகண்டம் |
| இனம் | 1,000 இரங்கர்கள் |
| Extinct | 20ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் |
சீன-திபெத்தியம்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | rgk |
மொழிசார் பட்டியல் | rgk.html |
| மொழிக் குறிப்பு | rang1266[1] |
இரங்காசு மொழி (Rangas language, ⓘ) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் இரங்காசு இன மக்களால் பேசப்படும் அழிந்துபோன மேற்கு இமயமலை மொழியாகும். இரங்காசு மக்கள் குமாவோனி மக்களுடன் சேர்ந்து அவர்களின் மொழிக்கு மாறினர். தற்போது சுமார் 1,000 மக்கள் இந்த இனக்குழுவில் உள்ளனர்.
இரங்காசு மொழி இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா நகரம், மற்றும் முன்சியாரி தாலுகாக்களில் (மகாகாளி பள்ளத்தாக்குடன் நேபாள எல்லையை எதிர்கொண்டுள்ள), இயோகர் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் பேசப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "இரங்காசு". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Ethnologue entry for Rangas