இரங்கசாமி சிகரம் மற்றும் தூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரங்கசாமி சிகரம்

இரங்கசாமி சிகரம் மற்றும் தூண் (Rangaswamy Peak and Pillar) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு சுற்றுலாத் தளமாகும். இச் சிகரம் கோத்தகிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செங்குத்தான இச் சிகரத்தின் உச்சிவரை யாரும் இதுவரை சென்றது இல்லை. கோத்தகிரி மலைத்தொடரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இடங்களான கொடநாடு காட்சி முனை, கேத்தரின் அருவி, எல்க் அருவி, லாங் வுட் சோலை, மேகநாடு அருவி மற்றும் இரங்கசாமி சிகரம் மற்றும் தூண் போன்றவையாகும். இக்காட்சிகளை இரசிக்க மிகச் சிறந்த காலம் கோடைக்காலமாகும்.[1][2]

இரங்கசாமி சிகரம்[தொகு]

இரங்கசாமி சிகரம் 11°27′39″வடக்கு 76°59′13″ கிழக்கிலும், கடல்மட்டத்திலிருந்து 5885 அடி (1794 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. இச் சிகரத்தை கொடநாடு காட்சி முனையில் இருந்துதான் பார்க்க முடியும்.[1][2][3]

இரங்கசாமி தூண்[தொகு]

இரங்கசாமி சிகரத்தின் வடமேற்கு திசையில் தான் இத் தூண் அமைந்துள்ளது. இத் தூணின் உயரம் சுமார் 400 அடி உயரத்தில் உள்ளது.[1][2]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்=[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Kotagiri". visitindia.org.in. பார்க்கப்பட்ட நாள் Sep 27, 2011.
  2. 2.0 2.1 2.2 "Kotagiri". www.nilgiris.tn.gov.in. Archived from the original on செப்டம்பர் 27, 2011. பார்க்கப்பட்ட நாள் Sep 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "RANGASWAMY PEAK". ecoheritage.cpreec.org. Archived from the original on மார்ச் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் Sep 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)