உள்ளடக்கத்துக்குச் செல்

இரக்ததந்திகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரக்ததந்திகா என்பவர் துர்கா தேவியின் உக்கிரமான வடிவம் ஆவார். ரக்த-தந்திகா என்பதற்கு சிவப்பு பற்களை கொண்டவள் என்று பொருள்; வைப்ரச்சித்தன் என்ற அசுரனை அழிக்கவே இவள் அவதாரம் எடுத்தாள். தேவி மஹாத்மியத்தின் படி, தேவி ரக்ததந்திகாவும் நந்தாதேவி, ஷாகாம்பரி, பிரமாரி மற்றும் பீமாதேவியும் துர்கா தேவியின் அவதாரம் ஆவர்.

கதை

[தொகு]

முன்னொரு காலத்தில் வைபிரச்சித்தர்கள் என்ற அசுரர்கள் இருந்தனர். அவர்கள் வலிமைமிக்கவர்களாக இருந்ததோடு, மூவுலகத்தையும் ஆண்டனர்; பல கொடுமைகளை புரிந்தனர். இதனால் தேவர்கள் துர்கா தேவியிடம் சென்று அவரிடம் முறையிட, அவள் ரக்ததந்திகாவாக அவதாரம் செய்து அவர்களைக் கொன்றாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரக்ததந்திகா&oldid=3493586" இலிருந்து மீள்விக்கப்பட்டது