இரகூகோ

இரகூகோ (Rakugo) (உதிரும் வார்த்தைகள்)[1] என்பது யப்பானின் கதை சொல்லும் ஒரு கலைவடிவமாகும். இது பாரம்பரியமாக யோஸ் திரையரங்குகளில் நிகழ்த்தப்படுகிறது.[2] மேடையில் ஒரு கதை சொல்லி அமர்ந்திருக்க அவருக்குப் பின்னால் ஒரு திரைசீலை தொங்கவிடப்பட்டிருக்கும். கதை சொல்லியின் தனது கையில் ஒரு விசிறியினை வைத்திருப்பார். உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்து கொள்ளாமல் இரகூகோ கலைஞர் நகைச்சுவையான (அல்லது சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமான கதைகள்) கதை ஒன்றினைச் சித்தரிப்பார். கதையில் வரும் அனைத்து கதாபாத்திரத்திற்கும் அவரே குரலினை மாற்றிமாற்றிப் பேசி கதை சொல்லிக்கொண்டே போவார்.
விளக்கம்
[தொகு]கதை சொல்லி மேடையின் நடுவில் அமர்ந்திருப்பார். தனது உடலசைவினைக் கொண்டு கதை கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதே அவரது நோக்கமாக இருக்கும். தனிநடிப்பு எப்போதும் ஒரு கதையின் இறுதியானவையும் மிக முக்கியமானவையுமான ஓச்சி அல்லது சேஜ் என்று அழைக்கப்படும் சொற்களால் முடிவடைகிறது. இந்த வார்த்தை விளையாட்டின் திடீர் குறுக்கீட்டைக் கொண்டுள்ளது. இவ்வாறுபன்னிரண்டு வகையான ஓச்சிகள் குறியிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சிக்கலான மாறுபாடுகள் காலப்போக்கில் மிகவும் அடிப்படை வடிவங்களிலிருந்து உருவாகின்றன.[3]
ஆரம்பகாலத்தில் இருந்த இரகூகோ தற்போது பல்வேறு பாணிகளில் வளர்ந்துள்ளது. இதில் சபிபனாசி (நாடக வடிவம்), ஓங்க்யோகுபனாசி (பாட்டுக்கள், இசை வடிவம்), கைதான்பனாசி (ஆவி கதைகள்) நிஞ்சோபனாசி (உணர்ச்சிபூர்வமாக கதை சொல்லுதல்) ஆகியன அடங்கும். இந்த வடிவங்கள் பலவற்றில், அசல் இரகூகோவிற்கு அவசியமான ஓச்சி இல்லை.
நியூயார்க்கின் பாருச் கல்லூரியின் நவீன மொழிகள் மற்றும் ஒப்பீட்டு இலக்கியத் துறையின் உதவிப் பேராசிரியரான நோரிகோ வதனாபே, இகூகோவை "அனைத்து பாத்திரங்களிலும் ஒரே நபர் நடிக்கும் ஒரு சூழ்நிலை நகைச்சுவை" என்று விவரித்துள்ளார்.[4]
வரலாறு
[தொகு]
யப்பானிய இலக்கிய வகையான செட்சுவா இரகூகோவின் முன்னோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது புராணங்கள், புனைவுகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. சேட்சுவாவில், முழு நீளக் கதைகள் கூறப்படுகிறது.
கொன்ஜாகு மோனோகாதரிசு மற்றும் உஜி சுய் மோனோகாதரி ஆகியவை ஹையன் காலகட்டம் (794–1185) முதல் காமகுரா காலம் (1185–1333) வரை தொகுக்கப்பட்ட சேட்சுவா தொகுப்புகள் ஆகும். அவற்றில் பல வேடிக்கையான கதைகளும இருந்தன. மேலும் சப்பானில் பௌத்தத் துறவிகள் அவற்றை மேற்கோள் காட்டி பௌத்த மதத்தைப் பரப்பினர். மகுரா நோ சோசி என்ற புத்தகத்தில், துறவிகள் தங்கள் அழகான குரல்கள் மற்றும் கதை சொல்லும் கலைகளுக்கு நற்பெயரைப் பெற்றதாக விவரிக்கப்பட்டுள்ளது.[5]
நவீன இரகுகோவின் வருகைக்கு முன்பு கோபனாசி வகை இருந்தன. இது 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பிரபலமாக இருந்தது. இவை சிறிய பொது இடங்களில் அல்லது தெருக்களில் இயற்றப்பட்டு, துண்டு பிரசுரங்களாக அச்சிடப்பட்டு விற்கப்பட்டன. கோபனாசியின் தோற்றம் கினோ வா கியோ நோ மோனோகாடாரி (நேற்று இன்று சொல்லப்பட்ட கதைகள், சுமார் 1620) என்ற தொப்பில் காணப்படுகிறது. இது நடுத்தர வர்க்கத்தை விவரிக்கும் சுமார் 230 கதைகள் அடங்கிய ஒரு அறியப்படாத எழுத்தாளரின் படைப்பாகும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tanaka, Sakurako (1993). Talking through the text : Rakugo and the oral/literal interface (Master thesis) (in ஆங்கிலம்). University of British Columbia. pp. 30, 45. doi:10.14288/1.0076952. Archived from the original on 2023-05-03.
- ↑ Sweeney, Amin (1979). "Rakugo: Professional Japanese Storytelling" (in ja) (pdf). Asian Folklore Studies (Nanzan University) 38 (1): 29. doi:10.2307/1177464. https://asianethnology.org/article/1658/download. பார்த்த நாள்: 2023-05-03. (Bibliography: volume 38(1), article)
- ↑ Rakugo: universal laughter, Tim Ryan. Retrieved 11 May 2007
- ↑ Rakugo related interview, Baruch College. Retrieved 11 May 2007
- ↑ 落語の歴史. Japan Arts Counsil.
மேலும் வாசிக்க
[தொகு]- Brau, Lorie. Rakugo: Performing Comedy and Cultural Heritage in Contemporary Tokyo. Lanham, MD: Lexington Books, 2008.
- McArthur, Ian. Henry Black: On Stage in Meiji Japan. Clayton: Monash University Publishing, 2013.
- Morioka, Heinz, and Miyoko Sasaki. Rakugo: The Popular Narrative Art of Japan. Cambridge, MA: Harvard University Asia Center, 1990.
- Shores, M.W. The Comic Storytelling of Western Japan: Satire and Social Mobility in Kamigata Rakugo. Cambridge: Cambridge University Press, 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- Rakugo video (in English) SFGTV San Francisco
- Short newspaper essay on differences between Kamigata (Osaka) and Edo (Tokyo) rakugo
- Learning Japanese Language and Culture through Rakugo Appreciation
- The Conversation article about rakugo and gender