இரகுநாத் ஷா
இரகுநாத் ஷா | |
---|---|
இராஜா | |
51வது நாகவன்ஷி அரசன் | |
ஆட்சிக்காலம் | 1665-1706 பொ.ச |
முன்னையவர் | இராம் ஷா |
பின்னையவர் | யதுநாத் ஷா |
பிறப்பு | நவரத்தன்கர் |
இறப்பு | நவரத்தன்கர் |
குழந்தைகளின் பெயர்கள் | யதுநாத் ஷா |
அரசமரபு | நாகவன்ஷி |
தந்தை | இராம் ஷா |
தாய் | முக்தா தேவி |
மதம் | இந்து சமயம் |
இரகுநாத் ஷா (Raghunath Shah)17 ஆம் நூற்றாண்டில் நாகவன்ஷி மன்னராக இருந்தார். இவர் தனது தந்தை இராம் ஷாவுக்குப் பிறகு 1665இல் பதவிக்கு வந்தார். இவரது தலைநகரம் நவரத்தன்கரில் இருந்தது. 1682ஆம் ஆண்டில் ஜகந்நாத் கோயில், போரியாவின் மதன் மோகன் கோயில், 1687இல் இராதா பாலாப் கோயில் உள்ளிட்ட பல கோவில்களைக் கட்டியிருந்தார். [1] ராஞ்சி மாவட்டத்தின் சுட்டியாவில் உள்ள ஒரு கோயில் கல்வெட்டில் இரகுநாத் ஷாவின் பெயர் ராஜா பானி முகுத் ராயின் ஐம்பதாவது வம்சாவளி என அறியப்பட்டுள்ளது.
இவர் ஓர் கவிஞராகவும் அறியப்படுகிறார். நாக்புரி மொழியில் பல கவிதைகளை எழுதியிருந்தார். [2] இவர் முதல் நாக்புரி மொழியின் கவிஞராக கருதப்படுகிறார். இவர் கிருட்டிணனின் சிறந்த வழிபாட்டாளராக இருந்தார். [3]
இவரது ஆட்சிக் காலத்தில், மேதினி ரே என்பவர் நவரத்தன்கர் மீது படையெடுத்தார். இவரது ஆட்சியின் போது நாகவன்ஷி பிரதேசங்களின் சில பகுதிகள் ஒடிசா மாகாணத்தில் சேர்க்கப்பட்டன. இந்த பகுதியின் வருவாய் ஒடிசாவின் முகலாய வருவாய் அதிகாரி மூலம் அரச கருவூலத்திற்கு செலுத்தப்பட்டது. 1692 ஆம் ஆண்டில், மொத்தம் ரூ. 9,705 ரூபாய் முகலாயருக்கு செலுத்தியிருந்தார். 1706இல் தான் இறக்கும் வரை ஆட்சி செய்தார். இவருக்குப் பிறகு இவரது மகன் யதுநாத் ஷா ஆட்சிக்கு வந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Nagbanshis And The Cheros". archive.org.
- ↑ "Giant new chapter for Nagpuri poetry". telegraphindia.
- ↑ "Journal of Historical Research, Volume 43". books.google.com. 2003.