இரகுநாத்பூர்
இரகுநாத்பூர் Raghunathpur | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 25°20′N 84°11′E / 25.33°N 84.19°E | |
| நாடு | |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | பக்சர் மாவட்டம் |
| ஏற்றம் | 58 m (190 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 5,601 |
| மொழிகள் | |
| • அலுவல் | போச்புரி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.என்-பி ஆர் |
இரகுநாத்பூர் (Raghunathpur) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள பக்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். பக்சரிலிருந்து தோராயமாக 41 கி.மீ தொலைவில் இந்நகரம் உள்ளது. பிரம்பூர் என்பது பீகாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய கிராமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக மேம்பாட்டுத் தொகுதியாகும். இகிராமம் சிவன் கோயில், மத நடைமுறைகள் மற்றும் அதன் கால்நடை கண்காட்சிக்கு பெயர் பெற்றது. சிவன் கோயிலில் மத சடங்குகளைச் செய்ய மக்கள் பிரம்மபூருக்கு வருகிறார்கள்.
புவியியல்
[தொகு]25°20′N 84°11′E / 25.33°N 84.19°E.[1] என்ற புவியியல் அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 58 மீட்டர் (190 அடி) இரகுநாத்பூர் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[2] இரகுநாத்பூரின் மக்கள் தொகை 5,601 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 55%, பெண்கள் 45% ஆவர். இரகுநாத்பூரில் கல்வியறிவு விகிதம் 53% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% என்பதை விடக் குறைவு. இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 42%. ஆகும். இரகுநாத்பூரில், மக்கள் தொகையில் 18% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இரகுநாத்பூரின் மக்கள் தொகை 11,857 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 6215 பேராகவும் பெண்கள் 5642 பேராகவும் இருந்தனர். இரகுநாத்பூரில் கல்வியறிவு விகிதம் 67.27% ஆகும். இது தேசிய சராசரியான 61.80% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 77.47%, பெண்களின் கல்வியறிவு 56.00%. ஆகும். இரகுநாத்பூரில், மக்கள் தொகையில் 17.59% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Raghunathpur
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "Raghunathpur Village Population - Barhampur - Buxar, Bihar". www.census2011.co.in. Retrieved 2025-11-13.