உள்ளடக்கத்துக்குச் செல்

இயேசுவின் விருத்த சேதன விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயேசுவின் விருத்த சேதனம். 1466ல் வரையப்பட்டது.

இயேசுவின் விருத்த சேதன விழா என்பது இயேசு கிறித்துவுக்கு யூத மரபுப் படி பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் செய்யப்பட்டு இயேசு என்னும் பெயரிடப்பட்ட நாளினை நினைவு கூறும் விதமாக கொண்டாடும் ஒரு கிறித்தவ விழாவாகும்.[1][2] தங்க மரபு (Golden Legend) என்னும் 14ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த கதைகளில் இந்த நிகழ்வு இயேசு முதன் முதலில் இரத்தம் சிந்தி மனுகுலத்தின் மீட்பு செயலை துவங்கியதற்காக முக்கியத்துவம் பெறுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவ்விழா சனவரி 1 அன்று கொண்டாடப்படுகிறது..[3] தற்போது சில ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பெரும்பான்மையான லூதரனிய சபைகள் இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.

1960க்கு முன் இருந்த கத்தோலிக்கத் திருச்சபையின் நாட்காட்டியில் இவ்விழா இடம்பெற்றிருந்தது.[4] அதன்பின் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் என்னும் பெயரின் கத்தோலிக்க திருச்சபை, 2 பெப்ரவரியில் இவ்விழாவை சிறப்பிக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Luke 2:21 (King James Version): "And when eight days were accomplished for the circumcising of the child, his name was called JESUS, which was so named of the angel before he was conceived in the womb."
  2. Catholic Encyclopedia: Feast of the Circumcision
  3. Greek Orthodox Archdiocese calendar of Holy Days
  4. General Roman Calendar as in 1954