இயேசுவின் உயிர்த்தெழுதல் நாட்கணிப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உயிர்ப்பு ஞாயிறு 2003 - 2043 கிரிகோரியன் நாட்காட்டியின் படி[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இயேசுவின் உயிர்த்தெழுதல் நாட்கணிப்பு (Computus) என்பது கிறித்தவ சபைகள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற இயேசுவின் உயிர்ப்புவிழாவை (Easter) எந்நாளில் சிறப்பிப்பது என்று உறுதிசெய்வதைக் குறிக்கும். கிறித்தவர்கள் பொதுவாக இயேசு பிறந்த விழாவை ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடுகின்றனர் (திசம்பர் 25). ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஆண்டுதோறும் மாறி வரும். இதற்கு அடிப்படையான காரணங்கள் இவை:
- சில கணிப்புகள் கிரகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
- வேறு சில கணிப்புகள் ஜூலியன் நாட்காட்டியை அடிப்படையாகக் கொள்கின்றன
- நிலவின் இயக்கம் அல்லது கதிரவனின் இயக்கம் என்னும் அடிப்படையும் மாற்றம் கொணர்கிறது.
மேலே கூறிய காரணங்களால் மேற்கு திருச்சபையும் கிழக்கு திருச்சபையும் வெவ்வேறு நாட்களில் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடுகின்றன. மேற்கு சபை கிரகோரியன் நாட்காட்டியையும் கிழக்கு சபை ஜூலியன் நாட்காட்டியையும் பின்பற்றுகின்றன.