உள்ளடக்கத்துக்குச் செல்

இயூ லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயூ லோ
Hugh Low
இயூ லோ
பேராக் மாநிலத்தின்
4-ஆவது பிரித்தானிய முதல்வர்
பதவியில்
1 ஏப்ரல் 1877 – 31 மே 1889
முன்னையவர்ஜேம்ஸ் கத்திரி டேவிட்சன்
பின்னவர்பிராங்க் சுவெட்டன்காம்
லபுவான் ஆளுநர்
பதவியில்
1866–1867
முன்னையவர்தாமஸ் பிட்சுஜெரால்ட் கலாகன்
பின்னவர்ஜான் போப் என்னெசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1824-05-10)10 மே 1824
அப்பர் கிளாப்டன், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு(1905-04-18)18 ஏப்ரல் 1905
அல்ச்ச்சியோ, இத்தாலி
தேசியம்பிரித்தானியர்
துணைவர்3
பிள்ளைகள்2
பணிகாலனிய நிர்வாகி

சர் இயூ லோ (ஆங்கிலம்; மலாய்: Hugh Low); GCMG (10 மே 1824 – 18 ஏப்ரல் 1905) என்பவர் பிரித்தானிய மலாயாவில் ஒரு காலனிய நிர்வாகி; மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார். போர்னியோ, லபுவானில் பல்வேறு காலனிய பதவிகளை வகித்த இவர். மலாயா தீபகற்பத்தில் பிரித்தானிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டபோது, கோலா கங்சார் புறநகர்ப் பகுதியில் முதல் ரப்பர் நடவுச் சோதனைகளைச் செய்து, மலாயாவில் முதல் ரப்பர் தோட்டத்தை நிறுவியவர் எனும் பெருமையையும் பெறுகிறார்.

மலாயா தீபகற்பத்தில் முதல் வெற்றிகரமான பிரித்தானிய நிர்வாகியாக அறியப்படும் இவரின் நிர்வாக அணுகுமுறைகள்; தென்கிழக்கு ஆசியா பிராந்தியம் முழுவதும் அடுத்தடுத்த பிரித்தானிய காலனிய நடவடிக்கைகளுக்கு முன்மாதிரிகளாக அமைந்தன.[1][2]

கினபாலு மலையில் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு மலையேற்றத்தை 1851-ஆம் ஆண்டு இவர் மேற்கொண்டார். அந்த வகையில் கினபாலுவின் மிக உயரமான சிகரத்திற்கும் (Low's Peak); கினபாலு மலையின் வடக்குப் பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்குப் பகுதிக்கும் (Low's Gully) இயூ லோவின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.[1] அத்துடன் மலேசியாவின் 5 தாவரங்கள்; 6 ஆர்க்கிட் மலர்கள்; 3 பூச்சி இனங்கள்; 2 பாலூட்டிகள்; 1 ஊர்வன (முதுகெலும்பி);[3][4] ஆகியவற்றுக்கு இயூ லோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மலேசிய வரலாற்றில் ஆழமாகத் தடம் பதித்த பிரித்தானியர்களில் ஒருவராக அறியப்படும் இவரின் பெயரால், பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் இயூ லோ சாலை (Hugh Low Street) எனும் பெயரில் ஒரு சாலைக்குப் பெயரிடப்பட்டு உள்ளது.[5]

வாழ்க்கை

[தொகு]
1881-ஆம் ஆண்டில், பேராக், கோலா கங்சாரில் இயூ லோ; முன்புறத்தில் மிளகுத் தோட்ட இந்தியத் தொழிலாளர்

இயூ லோ 1824-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் அப்பர் கிளாப்டன் (Upper Clapton) எனும் புறநகர்ப் பகுதியில் பிறந்தார். இவர் ஓர் இசுக்கொட்லாந்து தோட்டக்கலை வல்லுநரின் மகனாவார். சிறு வயதிலேயே, தன் குடும்பப் பூந்தோட்டத்தில் பணிபுரிந்து தாவரவியல் துறையில் ஆழ்ந்த அறிவைப் பெற்றார். இவரின் 20-ஆவது வயதில், தென்கிழக்காசிய ஆர்க்கிட் மலர்களைச் சேகரிக்க இவரின் தந்தை இவரைச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார்.[6] ஆனாலும் இவர் சிங்கப்பூரில் இருந்து போர்னியோவுக்குப் பயணம் செய்து சரவாக்கின் வெள்ளை ராஜாவான, ஜேம்சு புரூக்குடன் நட்பு கொண்டார்.

அடுத்தடுத்த மாதங்களில், இயூ லோ சரவாக்கின் உட்புறத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டார். அதன் பின்னர் அவர் சரவாக்கைப் பற்றி ஓர் ஆவண நூலையும் (A Botanist in Borneo: Hugh Low's Sarawak Journals, 1844-1846) எழுதினார்.[7] 1847-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக் பிரித்தானிய குடியேற்றமான (காலனி) லபுவானின் (British Colony of Labuan) ஆளுநராகவும், போர்னியோவின் தூதராகவும் நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் இயூ லோ, ஜேம்சு புரூக்கின் காலனியச் செயலாளராகப் பணியாற்றி (1848 – 1850) வந்தார் .

லபுவான்

[தொகு]
1889-ஆம் ஆண்டில், இந்தியர், சீனர், மலாய் தொழிலாளர்களுடன் இயூ லோ

இயூ லோ, ஆகத்து 12, 1848 அன்று சிங்கப்பூரில் கேத்தரின் நேப்பியர் (Catherine Napier) என்பவரை மணந்தார்.[8] அவர்களுக்கு இயூ "இயூகோ" புரூக் லோ (Hugh Hugo" Brooke Low) (1849–1887) என்ற மகனும்; கேத்தரின் "கிட்டி" எலிசபெத் லோ (Kitty Elizabeth Low) (1850–1923) என்ற மகளும் பிறந்தனர். 1851-ஆம் ஆண்டு லபுவான் தீவைத் தாக்கிய தொற்றுக் காய்ச்சல் நோயால் அவரின் மனைவி கேத்தரின் நேப்பியர் இறந்தார். அதன் பின்னர் சித்தி ஆவா (Siti Hawa) என்ற உள்ளூர் மலாய் பெண்ணை இயூ லோ மணந்தார். கேத்தரின் நேப்பியர் வழியாகப் பெற்ற குழந்தைகள் இருவரையும் அவர்களின் தாத்தா மற்றும் மாமா கவனித்துக் கொண்டனர்.[3]

லபுவானில், இயூ லோ நிர்வாக அனுபவத்தையும்; மலாய் மொழியில் சரளமான புலமையையும்; இயற்கை ஆர்வலராக நல்ல பெயரையும் பெற்றார். 1850 முதல் 1877 வரை இவர் ஒரு காவல் துறை நீதிபதியாகவும் பணி புரிந்தார். லபுவானில் இருந்து போது, கினபாலு மலையில் மூன்று முறை ஏறினார். முதல் மலையேற்றம் மார்ச் 1851-இல் நடைபெற்றது; மற்றும் இரண்டு மலையேற்றங்கள் 1858-ஆம் ஆண்டில் நடைபெற்றன.[9][10]

பேராக்

[தொகு]
1880 அல்லது 1881-ஆம் ஆண்டுகளில், பேராக், லாருட் உள்ளூர் நிர்வாகிகள்; மற்றும் இரண்டு மலாயா சுல்தான்களுடன் பேராக்கின் பிரித்தானிய முதல்வரான இயூ லோ

ஏப்ரல் 1877-இல், இயூ லோ மலாயா தீபகற்பத்திற்கு மாற்றப்பட்டு, பேராக் மாநிலத்தின் 4-ஆவது பிரித்தானிய முதல்வராக நியமிக்கப்பட்டார். 1874-ஆம் ஆன்டு பங்கோர் உடன்படிக்கை விதிமுறைகளின்படி, மலாய் மக்களின் பழக்கவழக்கங்கள்; மற்றும் மதம் சார்ந்த கூறுகளைத் தவிர; மற்ற அனைத்துக் கூறுகளிலும் பிரித்தானிய முதல்வர் என்பவர் மாநிலச் சுல்தானுக்கு அறிவுரைஞ்ராக இருந்தார்.

பேராக் மாநிலத்தின் முதலாவது பிரித்தானிய முதல்வர் ஜேம்ஸ் பர்ச் என்பவரின் கடுமையான நிர்வாக அணுகுமுறைகளினால் 1874-இல் கொல்லப்பட்டார். இந்த நிகழ்விலிருந்து பேராக் போர் தொடங்கியது. இந்தப் போரில் கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்ட மலாய் அதிகாரிகளும் இறந்துவிட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். அதன் பின்னர் இலண்டனின் காலனிய அலுவலகம் இயூ லோவைத் பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வராகத் தெரிவு செய்தது.[6][11] பிரித்தானிய முதல்வராக இயூ லோ தேர்வு செய்யப்பட்ட அணுகுமுறை; பேராக் நிர்வாக அமைப்புமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது எனவும் அறியப்படுகிறது.[12]

மலாயாவில் முதல் தொடருந்து பாதை

[தொகு]
1881-ஆம் ஆண்டில், இந்தியர் சிப்பாய்களுடன் இயூ லோ அவரின் மாளிகையில்...

இயூ லோ, பேராக்கில் அமைதித் தன்மையைக் கொண்டு வந்தார் என்று இன்றளவிலும் பேசப்படுகிறார். கிராமங்கள், மாவட்டங்களின் தலைவர்களுக்கு இடையிலான சண்டைச் சச்சரவுகளை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். உள்ளூர்த் தலைவர்களுக்கு போதுமான ஒத்துழைப்புகள் வழங்கி நட்புறவு கொண்டதன் மூலமாக பேராக் மாநிலத்தில் நிலையான பிரித்தானிய ஆட்சி நிறுவப்பட்டது.[13][14]

பேராக் மாநிலத்தின் வழக்கு முறைகளில் ஒன்றாக இருந்த அடிமைத் தனத்தை அகற்றிய பின்னர்,[15] ஈயத் தொழிலில் தீவிரக் கவனம் செலுத்தினார. அத்துடன் கோலா கங்சார் பகுதியில் ரப்பர் மர நடவுகளைத் தொடங்கி மலாயாவில் ரப்பர் உற்பத்தியை அறிமுகப்படுத்தினார். இவர் மலாயாவின் முதல் தொடருந்து பாதை (தைப்பிங் முதல் போர்ட் வெல்ட் வரை) உருவாக்குவதற்கு முன்னோடியாக விளங்கினார்.[16] மாநில நிர்வாக முறைமையில்; மலாய், சீனர், இந்தியர் மற்றும் பிரித்தானிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாநில மன்றத்தை உருவாக்கி, உள்ளூர்த் தலைவர்களைத் தன் நிர்வாகத்தில் பயன்படுத்திக் கொண்டார்.[1]

ரப்பர் உற்பத்தி

[தொகு]

நிர்வாகச் சாதனைகளுக்கும் கூடுதலாக; ரப்பர், காபி, கருப்பு மிளகு மற்றும் தேயிலை உள்ளிட்ட வெப்பமண்டல பயிர்கள் குறித்த சோதனை நடவுகள் தொடர்பான ஆய்வுகளிலும் இயூ லோ ஈடுபட்டார். மலேசியாவில் ரப்பர் சாகுபடி என்பது சர் இயூ லோவுடன் தொடங்கியது. அத்துடன் உலகளாவிய ரப்பர் உற்பத்தியில் மலேசியாவை முதன்மை நிலைக்குக் கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.

1882-ஆம் ஆண்டில் அவர் கோலா கங்சாரில் உள்ள ஒரு தோட்டத்தில் ரப்பர் விதைகளை நட்டு ஏழு ரப்பர்க் கன்றுகளை வளர்த்தார்.[17] அந்த வகையில், இயூ லோ மலாயாவில் ஒரு முன்மாதிரி ரப்பர் தோட்டத்தையும் உருவாக்கினார். இருப்பினும், இந்தத் தகவல் சில வேளைகளில், இயூ லோவிற்குப் பதிலாக எச். என். ரிட்லி என்பவரைத் தவறாக முன்னிலைப் படுத்துகிறது.[18] தீபகற்ப மலாயாவின் பல பகுதிகளிருந்து தாவரங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் மாதிரிகளையும் இயூ லோ சேகரித்தார்.[3]

ஓய்வு

[தொகு]

சர் இயூ லோ 1889-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறும்போது பேராக் அரசாங்க கருவூலத்தில் 1.5 மில்லியன் நீரிணை டாலர் கையிருப்பை விட்டுச் சென்றார்.[18][19]

இயூ லோ 1905-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி இத்தாலியின் அலசியோ நகரில் காலமானார்.

விருதுகள்

[தொகு]

தாவர சேகரிப்பாளர், இயற்கை ஆர்வலர்; மற்றும் ஆர்க்கிட் மலர் துறை போன்ற துறைகளில் அவரின் பணியை நினைவுகூரும் வகையில் பல தாவர இனங்களுக்கும் அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளன:[3]

செடிகள்

ஆர்க்கிடுகள்

  • Dimorphorchis lowii, டைமார்போர்கிஸ்
  • Dendrobium lowii, டென்ட்ரோபியம்
  • Paphiopedilum lowii, லேடீஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட்
  • Plocoglottis lowii, மந்தாரை
  • Malaxis lowii, சீவக ஆர்க்கிட்
  • Phalaenopsis lowii[20]

பூச்சிகள்

ஊர்வன

பாலூட்டிகள்

நினைவிடங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Encyclopædia Britannica.
  2. Malaysia, Singapore & Brunei By Simon Richmond, Damian Harper, Tom Parkinson, Richard Watkins Published by Lonely Planet, 2007; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74059-708-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-708-1
  3. 3.0 3.1 3.2 3.3 Cowan, C. F. (1968-01-01). "Sir Hugh Low, G.C.M.G. (1824-1905)". Journal of the Society for the Bibliography of Natural History 4 (7): NP–343. doi:10.3366/jsbnh.1968.4.7.np. பன்னாட்டுத் தர தொடர் எண்:0037-9778. 
  4. Beolens, Bo; Michael Watkins (zoologist); Grayson, Michael Grayson (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Low, H., p. 161).
  5. "From Hugh Low to Sultan Iskandar: Among the first streets in Ipoh in the late 19th century, this street was named after Sir Hugh Low, 3rd British Resident of Perak (1877-1889)". Perak Heritage Society (in ஆங்கிலம்). 4 October 2010. Retrieved 17 December 2025.
  6. 6.0 6.1 Heussler, Robert (1981). British rule in Malaya: the Malayan civil service and its predecessors, 1867 - 1942. Oxford: Clio Press. pp. 58–59. ISBN 978-0-903450-49-2.
  7. "A Botanist in Borneo: Hugh Low's Sarawak Journals 1844–1846 - Natural History Publications (Borneo)". www.nhpborneo.com. Retrieved 18 December 2025.
  8. Miss Catherine Napier was married in St. Andrew's Church, Singapore, on 12 August 1848, to Mr. Hugh Low: An Anecdotal History of Old Times in Singapore: From the Foundation of the ... by Charles Burton Buckley – Singapore – 1965 – Page 485
  9. The Living Age By Eliakim Littell, Making of America Project, Robert S. Littell Published by Living Age Co., 1848
  10. The Annual Register Published by Rivingtons, 1906; Item notes: 1905
  11. Sir Hugh Low G.C.M.G. by Sir Geoffrey Cator C.M.G. published in Malaya: The journal of the British Association of Malaya, the British Association of Malaya and Singapore, Great Britain Colonial Office, Malaya Published by British Association of Malaya, 1958; Item notes: 1958 Feb-Dec; pp. 13, 34, 36, 59
  12. Letters to Henrietta By Isabella Lucy Bird, Kay Chubbuck, Henrietta Amelia Bird Contributor Kay Chubbuck Published by UPNE, 2003; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55553-554-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55553-554-4
  13. Heussler, Robert (1981). British rule in Malaya: the Malayan civil service and its predecessors, 1867 - 1942. Oxford: Clio Press. pp. 59–62. ISBN 978-0-903450-49-2.
  14. Heussler, Robert (1981). British rule in Malaya: the Malayan civil service and its predecessors, 1867 - 1942. Oxford: Clio Press. p. 63. ISBN 978-0-903450-49-2.
  15. The Making of Modern South-East Asia By D.J.M. Tate Published by Oxford University Press, 1971; Item notes: v.2
  16. Asian Transformation: A History of South-East, South, and East Asia By Gilbert Khoo, Dorothy Lo Published by Heinemann Educational Books (Asia), 1977
  17. Journal of Macromolecular Science By Taylor & Francis Published by M. Dekker, 1981; Item notes: v.15 1981 pp.683-1636; p. 1283
  18. 18.0 18.1 Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East Timor By Keat Gin Ooi; Contributor Keat Gin Ooi; Published by ABC-CLIO, 2004; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-770-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-770-2
  19. British Malaya: An Account of the Origin and Progress of British Influence in Malaya By Frank Athelstane Swettenham Published by J. Lane, 1907
  20. Alrich, Peggy & Higgins, Wesley. (2014). Phalaenopsis lowii. Phalaenopsis. 24. 8-11.
  21. Beolens, Bo; Michael Watkins (zoologist); Grayson, Michael Grayson (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Low, H., p. 161).
அரசியல் பதவிகள்
முன்னர் பேராக் பிரித்தானிய முதல்வர்
1877 – 1889
பின்னர்

இயூ லோ எழுதிய நூல்கள்

[தொகு]

இயூ லோ பற்றிய ஆவணங்கள்

[தொகு]
  • Sir Hugh Low, G.C.M.G (1824-1905) by Charles F. Cowan in J.Soc.Biblphy.nat.Hist. v.4 pp. 327–343 (1968)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயூ_லோ&oldid=4425258" இலிருந்து மீள்விக்கப்பட்டது