இயூகின் குடிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயூகின் குடிலின்
Eugene Goodilin
பிறப்புநவம்பர் 1969 (அகவை 54)
தேசியம்உருசியன்
துறைவேதியியல், பொருளறிவியல்
பணியிடங்கள்பொருளறிவியல் துறை, வேதியியல் துறை, மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வேதியியல் துறை பேராசிரியர், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
ஆய்வேடு (1995)

இயூகின் குடிலின் (Eugene Goodilin) உருசிய நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் பொருளறிவியல் அறிஞர் ஆவார். 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இவர் பிறந்தார்.

வாழ்க்கை[தொகு]

2006 ஆம் ஆண்டு உருசிய அறிவியல் கல்விக் கழகத்தில் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் அக்கழகத்துடன் தொடர்புடைய இளைய உறுப்பினர் என்ற பெருமைக்கும் உரியவரானார். [1]

2015 ஆம் ஆண்டு குடிலின் வழிகாட்டுதலின் கீழ் லோமோனோசோவ் மாசுகோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு வாழும் மைட்டோகாண்ட்ரியாவில் நடைபெறும் எலக்ட்ரான் போக்குவரத்து சங்கிலியை அழிவில்லா பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு தனித்துவமான முறையை உருவாக்கியது. இதற்காக மேற்பரப்பு மேம்படுத்தப்பட்ட ராமன் நிறமாலையை இக்குழு பயன்படுத்தியது. [2] இந்த பிரிவில் இவர்களின் பணிகள் அறிவியல் அறிக்கைகள் என்ற இதழில் வெளியிடப்பட்டன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1], ПОСТАНОВЛЕНИЕ Общего собрания Российской академии наук "Об избрании членов-корреспондентов РАН"
  2. 2.0 2.1 "Mitochondria on guard of human life", Phys.org, November 18, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயூகின்_குடிலின்&oldid=2963835" இலிருந்து மீள்விக்கப்பட்டது