இயான் நிப்போம்னிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இயான் நிப்போம்னிசி
Ian Nepomniachtchi
Ian Nepomniachtchi Tal Memorial 2018.jpg
2018 இல் நிப்போம்னிசி
முழுப் பெயர்இயான் அலெக்சாந்திரவிச் நிப்போம்னிசி
நாடுஉருசியா
பிறப்பு14 சூலை 1990 (1990-07-14) (அகவை 31)
பிரையான்சுக், உருசியா, சோவியத் ஒன்றியம்
பட்டம்கிராண்ட்மாசுட்டர் (2007)
பிடே தரவுகோள்2782 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2792 (மே 2021)
தரவரிசைஇல. 5 (திசம்பர் 2021)
உச்சத் தரவரிசைஇல. 4 (ஏப்ரல் 2020)

இயான் அலெக்சாந்திரவிச் நிப்போம்னிசி (Ian Alexandrovich Nepomniachtchi, உருசியம்: Ян Алекса́ндрович Непо́мнящий, ஒ.பெ யான் அலெக்சாந்திரவிச் நிப்போம்னிஷி, பஒஅ[ˈjan ɐlʲɪkˈsandrəvʲɪtɕ nʲɪˈpomnʲɪɕːɪj](Ltspkr.png கேட்க); பிறப்பு 14 சூலை 1990) ஒரு உருசிய சதுரங்க கிராண்ட்மாஸ்டரும், வர்ணனையாளரும் ஆவார்.

நிப்போம்னிசி 'டோட்டா' என்ற இணைய விளையாட்டின் ஒரு முன்னாள் ஆட்டக்காரரும் ஆவார்.[1] [2]

சதுரங்க வாழ்க்கை[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கையில்[தொகு]

நிப்போம்னிசி நான்கு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். இவரது பயிற்சியாளர் வாலண்டின் எவ்டோகிமென்கோவின் வழிகாட்டுதலின் கீழ், உலக மற்றும் ஐரோப்பிய வாகையாளர் போட்டிகளில் பங்கேற்றார். [3] இவர் மூன்று முறை ஐரோப்பிய இளையோர் சதுரங்க வாகையாளர் போட்டியை வென்றுள்ளார். 2000 ஆம் ஆண்டில், அவர் 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வென்றார். 2001 மற்றும் 2002 இல், அவர் 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வென்றார். [4] 2002 இல், நெபோம்னியாச்சி 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் உலக இளைஞர் சதுரங்க வாகையாளர் போட்டியை தனது போட்டியாளரான மேக்னஸ் கார்ல்சனை இறுதிச் சுற்றில் முந்தி வென்றார். [5]

உலக சதுரங்க வாகையாளர் போட்டி[தொகு]

ஏப்ரல் 2021 இல், நிப்போம்னிசி 2020/2021 கேண்டிடேட்ஸ் போட்டியை 8.5/14 புள்ளிகளுடன் (+5-2=7) வென்றார். [6]இப்போட்டியை வென்றதன் மூலம் 2021 உலக சதுரங்க வாகையாளர் போட்டிக்கு நெப்போ தகுதி பெற்றார். இப்போட்டியில் மேக்னசு கார்ல்சனுடன் மோதிய நெப்போ, 3½-7½ என்ற கணக்கில் ஆட்டத்தை இழந்தார். மேக்னசு தனது உலக வாகையாளர் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நிப்போம்னிசி ஒரு யூதர் ஆவர்.[7][8] இவர் "நெப்போ" என்ற புனைப்பெயரால் குறிப்பிடப்படுகிறார். [9] இவர் உருசிய சமூகப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[10] இவர் 2006 இல் டோட்டா என்ற இணைய விளையாட்டிற்கு அறிமுகமானார். பல டோட்டா போட்டிகளில் பங்குபெற்று அப்போட்டிகளில் பல வெற்றிகளையம் குவித்துள்ளார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயான்_நிப்போம்னிசி&oldid=3364031" இருந்து மீள்விக்கப்பட்டது