இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயல்புப் புணர்ச்சி என்பது சொற்களோ அல்லது சொல்லின் உறுப்புகளோ எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாக வரும் சொற் புணர்ச்சி வகை ஆகும்.[1]

எடுத்துக்காட்டு[தொகு]

  • மண் + வெட்டி = மண்வெட்டி
  • கடல் + அலை = கடலலை
  • எமது + நாடு = எமதுநாடு

ஆகவே நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது அவற்றின் வடிவங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது.

நிலைமொழி வருமொழி புணர்ந்தசொல்
கடல் அழகு கடலழகு
அவர் ஆல் அவரால்
மாணவர் அணி மாணவரணி

இங்கு வரும் ல், ர் என்பன நிலை மொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்துக்களாகும். அ, ஆ வருமொழியில் முதல் எழுத்துகளாகும். இங்கு மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர்மெய் ஆகியுள்ளன. இதுவும் இயல்புப் புணர்ச்சியேயாகும்.

ல் + அ = ல
ர் + அ = ர
ர் + ஆ = ரா

மெய்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பது தொல்காப்பியம். எனவே இங்கு மெய் எழுத்துகளோடு உயிரெழுத்து இயல்பாக இணைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் மொழியும் இலக்கியமும், தரம் 8, இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்கம் 96