இயற்பியல் பற்றிய பெயின்மான் விரிவுரைகள்
த பெயின்மன் லெக்செர்ஸ் ஒன் பிசிக்ஸ் இனது மூன்று நூற்றொகுதிகள் | |
| நூலாசிரியர் | ரிச்சர்டு பெயின்மான் |
|---|---|
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| பொருண்மை | இயற்பியல் |
| வெளியீட்டாளர் | அட்டிசன்-வெஸ்லி |
வெளியிடப்பட்ட நாள் | 1964. திருத்தப்பட்ட மீள்பதிப்பு 2005 ஆம் ஆண்டில் |
| OCLC | 19455482 |
இயற்பியல் பற்றிய பெயின்மான் விரிவுரைகள் (The Feynman Lectures on Physics, த பெயின்மன் லெக்செர்ஸ் ஒன் பிசிக்ஸ்) என்பது நோபல் பரிசுபெற்ற ரிச்சர்டு பெயின்மனின் விரிவுரைகளின் தொகுப்பாகி வெளிவந்த இயற்பியல் பாடநூல் ஆகும். ரிச்சர்டு பெயின்மன் விளக்கமளிப்பதில் சிறந்தவர் ("The Great Explainer") என சிலவேளைகளில் விளிக்கப்பட்டவர்.[1] இதில் இடம்பெற்ற விரிவுரைகள் 1961-1964 காலப்பகுதியில் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழக இளங்கலை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டவை. இந்த நூலினை பெயின்மானோடு சேர்ந்து ரொபேர்ட் பி. லெயிட்டனும் மத்தியூ சாண்ட்சும் எழுதியுள்ளனர்.
நேச்சர் இதழில் 2013 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுரையில் இந்த நூல், "ஆர்வத்தோடும் உட்டெளிவோடும் அளிக்கப்பட்ட எளிமையும் அழகும் ஐக்கியமும்" என விபரிக்கப்படுகிறது.[2]
விளக்கம்
[தொகு]இந்த நூலில் மூன்று தொகுதிகள் உள்ளன. முதல் தொகுதியானது இயக்கவியல், கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தில் கவனம் செலுத்துகிறது. இத்தொகுதியில் சார்பியல் விளைவுகளும் அடங்கும். இரண்டாவது தொகுதியானது மின்காந்தவியல் மற்றும் பருப்பொருள் பற்றிய விரிவுரைகளை உள்ளடக்கியது. மூன்றாவது தொகுதியானது குவாண்டம் இயக்கவியல் பற்றியது. எடுத்துக்காட்டாக, இரட்டை-பிளவு சோதனையானது எவ்வாறு குவாண்டம இயக்கவியலின் அத்தியாவசிய அம்சங்களை நிரூபிக்கிறது என்பது பற்றிய உள்ளடக்கத்தைக் கூறலாம். கணிதத்திற்கும் இயற்பியலுக்கும் இடையிலான உறவு மற்றும் பிற அறிவியல்களுடன் இயற்பியலின் உறவு பற்றிய அத்தியாயங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
2013 ஆம் ஆண்டில் த பெயின்மன் லெக்செர்ஸ் வலைத்தளத்தோடு இணைந்து கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகமானது இந்த நூலை அவ்வலைத்தளத்தில் இலவசமாக வெளியிட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ LeVine, Harry (2009). The Great Explainer: The Story of Richard Feynman. Greensboro, North Carolina: Morgan Reynolds. ISBN 978-1-59935-113-1.
- ↑ Phillips, Rob (2013-12-05). "In retrospect: The Feynman Lectures on Physics" (in en). Nature 504 (7478): 30–31. doi:10.1038/504030a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:24305137. Bibcode: 2013Natur.504...30P.
- ↑ "The Feynman Lectures in Physics". Archived from the original on 4 March 2022. Retrieved 20 May 2020.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- த பெயின்மன் லெக்செர்ஸ் ஒன் பிசிக்ஸ் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் – HTML பதிப்பு.
- த பெயின்மன் லெக்செர்ஸ் ஒன் பிசிக்ஸ் த பெயின்மன் லெக்செர்ஸ் வலைத்தளம்