உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்சீர் வெண்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ச் செய்யுள்களிலே அடுத்தடுத்து வரும் சீர்கள் அவற்றிடையே கொண்டுள்ள தொடர்பு தளை எனப்படுகின்றது. இவ்வாறான தளைகளுள் ஒரு வகையே இயற்சீர் வெண்டளை ஆகும்.

இயற்சீர் வெண்டளையின் இலக்கணம்

[தொகு]

இரண்டு சீர்களுக்கிடையே இயற்சீர் வெண்டளை உருவாவதற்கு,

  • நிலைச்சீர் என அழைக்கப்படும், செய்யுளில் முதலில் வரும் சீர் இரண்டு அசைகளை உடைய சீராக இருத்தல் வேண்டும்.
  • அதை அடுத்து வருகின்ற சீர், அதாவது வருஞ்சீர், ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு அசைகளையுடைய சீர்களில் ஒன்றாக இருக்கலாம்.
  • நிலைச் சீரின் இறுதி அசையும், வருஞ்சீரின் முதல் அசையும் ஒரே வகையினவாக அமைதல் கூடாது. வருஞ்சீரின் இறுதி அசை நேரசை எனின், வருஞ்சீரின் முதலசை நிரையசையாக இருக்கவேண்டும். முன்னது நிரையசையாக இருப்பின் பின்னையது நேரசையாக இருத்தல் வேண்டும்.

வெண்பாக்களுக்கு உரியதான வெண்டளை உருவாகும்போது நிலைச்சீரானது, இயற்சீர் என அழைக்கப்படும் ஈரசைச் சீராகவோ, உரிச்சீர் என வழங்கும் மூவசைச் சீராகவோ இருக்கலாம். இயற்சீரை நிலைச் சீராகக் கொண்ட வெண்டளையே இயற்சீர் வெண்டளை ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்சீர்_வெண்டளை&oldid=1829629" இலிருந்து மீள்விக்கப்பட்டது