இயற்கை வேளாண்மையோடு ஒருங்கிணைந்த பண்ணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசோலா, பஞ்சகாவ்யா மற்றும் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து இயற்கை வேளாண்மையோடு ஒருங்கிணைந்த பண்ணையத்தை மேற்கொள்ளலாம். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசோலாவா உற்பத்தி செய்து பசுந்தீவனமாக மற்றம் இயற்கை உரமாக பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை கழிவுகளைக் கொண்டு பஞ்சகாவ்யா தயாரித்து பயிர்களில் நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையம்[தொகு]

கால்நடகள், கோழிகள் மற்றும் மீன் ஆகியவற்றை ஒரே இடத்தில் பராமரித்து ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பினையும் கூடுதல் வருவாயினையும் பெற முடியும். உதாரணமாக ஒரே இடத்தில் மேல்தளத்தில் கோழிகளும் அவைகள் இடும் எச்சத்தை பயன்படுத்திக் கொள்ள கீழ்தளத்தில் பன்றிகளும் வளர்க்கப்பட்டு குளத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை வேளாண் பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மையுடன் கால்நடைகளை இணைக்கும்போது நிலம், நீர் மற்றம் தாவரங்கள் ஆகியவை முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த பண்ணை முறையின் அவசியம்[தொகு]

வருடத்திற்கு ஒரு பயிர் மட்டும் சாகுபடி செய்யும் இடங்கள் நீர் பற்றாக்குறையுள்ள இடங்கள் மற்றும் மழை குறைவாக உள்ள இடங்களில் வேளாண்மையுடன் கால்நடைகளை வளர்க்கும் போது ஆண்டு முழுவதும் கூடுதல் வருனத்தையும் குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலை வாய்ப்பினையும் பெறலாம். காநல்நடைக் கழிவுகளை நிலத்திற்க உரமாக பயன்படுத்தி உரச் செலவை குறைப்பதுடன் உற்பத்தியையும் அதிகரிக்கலாம். இயற்கை உரத்தை பயன்படுத்துவதால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. பயரில் இருந்து கிடைக்கும் பயர் பாகங்களை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தி கால்நடைகளின் தீவனச் செலவை குறைக்கலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பசுந்தீவன உற்பத்தி[தொகு]

பசந்தீவனப் பயிர்களை பயிர் செய்வதன் மூலம் மண்வளம், மண்ணின் நீர் தாங்கும் சக்தி அதிகரிப்பதோடு களைகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. பயறுவகை தீவனப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் மண்ணின் தழைச்சத்து வளம் அதிகரிக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]