இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், போர்ட் லூயிசு

ஆள்கூறுகள்: 20°09′47.4″S 57°30′08.5″E / 20.163167°S 57.502361°E / -20.163167; 57.502361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்கை வரலாற்று அருங்காட்சியம்
Natural History Museum
Map
அமைவிடம்போர்ட் லூயிசு, மொரிசியசு
ஆள்கூற்று20°09′47.4″S 57°30′08.5″E / 20.163167°S 57.502361°E / -20.163167; 57.502361
வகைஅருங்காட்சியகம்

இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் |(Natural History Museum) மொரிசியசு நாட்டின்]] போர்ட் லூயிசு நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தைக் குறிப்பிடுகிறது.

வரலாறு[தொகு]

இந்த அருங்காட்சியகம் மொரிசியசு நாட்டில் உள்ள மிகப் பழமையான அருங்காட்சியகமாகும். அருங்காட்சியகக் கட்டிடம் 1880 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது [1] 22 டிசம்பர் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று பிரதம மந்திரி பிரவிந்த் இயக்நாத், மொரிசியசு முன்னாள் படைவீரர்களுக்கான முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் அஞ்சலிக் காட்சியகத்தை அருங்காட்சியகத்திற்குள் திறந்து வைத்தார்.

கட்டிடக்கலை[தொகு]

அருங்காட்சியகம் மொரிசியசு நிறுவனக் கட்டிடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ளது. [1] விலங்கினங்கள் காட்சியகம், கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகம், பூச்சிகள், வானிலை ஆய்வு, ராட்சத ஆமை காட்சியகம் மற்றும் டோடோவின் உலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [2]

கண்காட்சிகள்[தொகு]

மொரிசியசு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் பல்வேறு பிரதிகளை காட்சிப்படுத்துகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Natural History Museum". Mauritius Museums Council. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
  2. "Mauritius Natural History Museum, Port Louis". Mauritius Holiday Discovery. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
  3. "Natural History Museum". Mauritius Attractions. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.