உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்
National Museum of Natural History
Map
நிறுவப்பட்டது1910
அமைவிடம்நேஷனல் மால், வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
வகைஇயற்கை வரலாறு
வலைத்தளம்www.mnh.si.edu

இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம் (National Museum of Natural History) என்பது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் பெருநகரில் அமைந்துள்ளது.[1] இந்த அருங்காட்சியகம் உலகிலுள்ள மிகப் பெரிய காட்சியகங்களுள் ஒன்றாகும். பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருள்கள் உள்ளன. பெருமை மிக்க ஹோப் வைரம் (நம்பிக்கை வைரம்) இங்குள்ளது. இந்த வைரம், அதனை வைத்திருப்பவருக்கு நன்மை பயக்காது என்பது ஓர் ஐதீகம். பதினாறு அருங்காட்சியகங்களும் ஒரு மிருகக் காட்சிச்சாலையும் இதில் அடங்கும்.

இந்த அருங்காட்சியகம் தோன்றக் காரணமான ஜேம்ஸ் ஸ்மித்சன், அமெரிக்க மண்ணில் கால் பதித்தவரல்லர். அவருக்கு அங்கு யாரையும் தெரியாது. இருப்பினும் இந்த பெருமைமிக்க காட்சியகம் அமையக் காரணமானவர். இந்த புதிரான துன்பப் பட்ட ஆங்கில அறிவியலாளர், தனது சொற்ப சொத்தினை அமெரிக்க மக்களுக்கு ஏன் அன்பளிப்பாகக் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NMNH Fact Sheet". Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.