இயற்கை மூலதனம்
இயற்கை மூலதனம் உலகின் இயற்கை வளங்களின் பங்குளிப்பாகும், இதில் புவியியல், மண், காற்று, நீர் மற்றும் அனைத்து உயிரினங்களும் அடங்கும். சில இயற்கை மூலதன சொத்துக்கள் மக்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதால், இவை பெரும்பாலும் சுற்றுச்சூழல் சேவை என அழைக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு (சுத்தமான நீர் மற்றும் வளமான மண்) பொருளாதாரத்தோடு பினைந்திருக்கிறது மற்றும் சமுதாயத்திற்கு உட்பட்டு மனித உயிர்கள் வாழ சாத்தியமாக்குகிறது.[2][3]
மூலதனத்தின் பொருளாதார கருத்து (இயற்கை ஆதாரங்களை உற்பத்தி செய்யும் ஆதாரங்கள்) இயற்கை சூழலால் வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இது விரிவாக்கமாகும். உதாரணமாக, நன்கு பராமரிக்கப்படும் காடு அல்லது நதி, புதிய மரங்கள் அல்லது மீன்களின் நிலையாக அல்லது நிரந்தரமாக கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யலாம், அதேசமயத்தில் அந்த ஆதாரங்களின் அதிகப் பயன்பாட்டால், மரம் அல்லது மீன் இரண்டின் நிரந்தர வீழ்ச்சிக்கும் வழிவகுக்கலாம். இயற்கை மூலதனம், அத்தியாவசிய சேவைகளான தண்ணீரை வழங்குவது, மணல்அரிப்பை தடுப்பது மற்றும் பூச்சிகள் மூலம் செடிகளின் மகரந்தச் சேர்க்கை நடத்துவது போன்றவற்றை வழங்குகிறது, இது பிற இயற்கை வளங்களின் நீண்ட கால சாத்தியக்கூறை உறுதிப்படுத்துகிறது. கிடைக்கக்கூடிய இயற்கை மூலதன சொத்துக்களின் தொடர்ச்சியான சேவைகளை ஒரு ஆரோக்கியமான, செயல்பாட்டு சூழலில் சார்ந்து இருப்பதால், வாழ்வாதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள், பல்வேறு உயிரனங்கள், இவையாவும் இயற்கை மூலதனத்தின் முக்கிய அங்கங்கள் ஆகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Valiela, Ivan; Bowen, Jennifer L.; York, Joanna K. (2001). "Mangrove Forests: One of the World's Threatened Major Tropical Environments". BioScience 51 (10): 807–815. doi:10.1641/0006-3568(2001)051[0807:mfootw]2.0.co;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1525-3244. http://bioscience.oxfordjournals.org/content/51/10/807.full. பார்த்த நாள்: 5 January 2016.
- ↑ "What is natural capital?". naturalcapitalforum.com. World Forum on Natural Capital. Archived from the original on 6 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
- ↑ "What is Natural Capital". www.naturalcapitalcoalition.org. Natural Capital Coalition. Archived from the original on 2 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Search - The Encyclopedia of Earth". www.eoearth.org.