இயற்கை பேரழிவு குறைப்புக்கான சர்வதேச தசாப்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐநா பொதுச் சபை 1990 களை இயற்கை பேரழிவு குறைபாட்டிற்கான சர்வதேச தசாப்தமாக (IDNDR) அறிவித்தது.[1]

நிலநடுக்கம், ஆழிப்பேரலை, வெள்ளம், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், வறட்சி, வெட்டுக்கிளி படையெடுப்பு மற்றும் பிற இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்குளாற உயிரிழப்பு, சொத்து அழிவு மற்றும் சமூக மற்றும் பொருளாதார இடையூறுகள் போன்றவற்றின் இழப்பைக் குறைப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

தீர்மானம் 44/236 (1989 டிசம்பர் 22) படி இயற்கை பேரழிவு குறைப்புக்கான சர்வதேச தசாப்தம், ஜனவரி 1, 1990 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது. வளரும் நாடுகளில் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும், உயிர் இழப்பு, சொத்து சேதம் மற்றும்  சமூக மற்றும் பொருளாதார இடையூறுகள் போன்றவற்றை ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைகள் மூலம், குறைக்கும்விதமாக இந்த தசாப்தத்தில் செயற்படுவதற்காக, ஐக்கிய நாடுகளின் செயலகத்தில் யுனெஸ்கோ உடன் இணைந்த ஒரு செயலகம் ஜெனிவாவில் நிறுவப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]