இயற்கையின் சேவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்கையின் சேவைகள் என்பது, சிறப்பாகப் பொருளாதார ரீதியில் அளவிடப்படக்கூடிய, இயற்கை மனிதனுக்குச் செய்யும் நன்மைகளைக் குறிக்கும் ஒரு தொடராகும். ராபர்ட் கொஸ்டான்சா (Robert Costanza) என்பவரும், வேறு இயற்கை மூலதனம் (natural capital) தொடர்பான கோட்பாட்டாளர்களும், 1990 களில், இயற்கையினால் மனிதனுக்கான இயற்கையின் சேவைகள் பற்றி விரிவான பொருளியல் பகுப்பாய்வுகளை நடத்தினர். இவற்றுள் 17 விடயங்களின் பொருளாதாரப் பங்களிப்பு ஆண்டொன்றுக்கு அண்ணளவாக 33 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணிக்கப்பட்டது. இது 25 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணிக்கப்பட்ட, மனிதர்களுக்கிடையேயான பொருளியல் நடவடிக்கைகளின் பெறுமானத்திலும் அதிகமாகும். இயற்கையின் சேவைகளின் பெறுமானம், அச் சேவைகளை மனிதரின் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் பெற்றுக்கொள்வதற்கான செலவினம் என்ற அடிப்படையில் கணிப்பிட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு, இயற்கை முதலீடு, புவியின் பெறுமானம் (value of Earth), உயிரின் பெறுமானம் (value of life) போன்றவை தொடர்பான வாதங்களில் பெருமளவுக்கு மேற்கோள் காட்டப்பட்டது. இது மனித வளர்ச்சிக் கோட்பாடு, இயற்கை முதலீட்டுவாதம் ஆகியவற்றின் முக்கிய திருப்பு முனையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கையின்_சேவைகள்&oldid=2740731" இலிருந்து மீள்விக்கப்பட்டது