இயற்கைநிலைக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

இப்பிரபஞ்சமானது இயற்கையானது;இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கிடையாது. இது கிரேக்க தத்துவ அறிஞர் தாலஸ் என்பவரின் கருத்தாகும். இயற்கைநிலைக் கோட்பாடு மிகப் பழமையான கருத்தாகும்.

இயற்கைநிலைக் கோட்பாட்டின் கருத்துக்கள் மற்றும் கல்வியாளர்கள்[தொகு]

அறிவியல் தன்மையுடைய இயற்கை நிலைக் கோட்பாடு-ஹெர்பார்ட் ஸ்பென்சர். அனுபவத் தன்மையுடைய இயற்கைநிலைக் கோட்பாடு-ரூஸோ. குழந்தையின் இயல்பான வளர்ச்சி-ரூஸோ, பெஸ்டலாசி, புரோபல், மாண்டிச்சோரி.

கல்விக் குறிக்கோள்கள்[தொகு]

குழந்தை இயல்பாக வளரவும், இயல்பாக வாழவும் கற்க உதவுவதே கல்வியின் குறிக்கோள் என ரூஸோ கருதுகிறார்.

கற்கும் சூழல்[தொகு]

இயற்கைச் சூழலே மாணவர்கள் கற்கும் இடமாகும் என ரூஸோ கருதுகிறார்.மாணவர்களை இயற்கையின் மடியில் தவழ விடுதல் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சான்றாதாரம்[தொகு]

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.53-54,மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.