இயற்கைச் சூழல்


இயற்கைச் சூழல் (Natural environment) என்பது பூமியில் இயற்கையாகத் தோன்றும் அனைத்து உயிரினங்களையும், உயிரற்ற பொருட்களைக் குறிக்கிறது. இது முக்கியமாக இரண்டு கூறுகளைக் கொண்டது: முதலாவதாக, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள், மண், பாறைகள் மற்றும் புவியின் வளிமண்டலம் போன்றவற்றை உள்ளடக்கிய இயற்கை அமைப்புகள் ஆகும். இரண்டாவதாக, காற்று, நீர், காலநிலை போன்ற உலகளாவிய இயற்கை வளங்கள் ஆகும்.
இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைச் சூழலில் இருந்து, முற்றிலும் மாறுபட்டது. மனித வாழ்விற்குத் தேவையான, அடிப்படை ஆதாரங்களான உணவு, நீர் மற்றும் சுவாசிக்கத் தேவையான காற்றை இயற்கை வழங்குகிறது. இருப்பினும், தற்காலத்தில் மாசுபாடு, காடழிப்பு, காலநிலை மாற்றம் போன்றவைகள், மனிதச் செயல்பாடுகளால் இயற்கைச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, புவியின் சமநிலையைப் பேணவும், எதிர்கால சந்ததியினருக்காகவும் இயற்கையைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அதற்கு உலக மக்களிடையை இது குறித்த கவனித்தல், தேடல்கள் தேவையாகும்.
இந்தச் சூழல், மனிதர்களின் உயிர்வாழ்வையும், பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கும், அனைத்து உயிரினங்களின் இடைவினைகள், காலநிலை, வானிலை மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.[1]பூமியில் முற்றிலும் இயற்கையான சூழல்கள் இல்லை. இயற்கையானது பொதுவாக தொடர்ச்சியாக மாறுபடுகின்றன.
இதன் கூறுகள்
[தொகு]- சூழியல் அலகு : பெரும் நாகரிக மனிதத் தலையீடு இல்லாமல், இயற்கை அமைப்புகளாகச் செயல்படும் முழுமையான சூழலியல் அலகுகள் அதிக பங்கு வகிக்கின்றன. இதில் அனைத்து தாவரங்கள், நுண்ணுயிரிகள், மண், பாறைகள், பீடபூமிகள், மலைகள், வளிமண்டலம் மற்றும் அவற்றின் எல்லைகளுக்குள் நிகழும் இயற்கை நிகழ்வுகளும், அவற்றின் தன்மைகளும் ஆகியவை அடங்குகின்றன.[2]
- இத்துடன் நாகரிக, அறிவியல் வளர்ச்சிகளால் உருவான ஆற்றல், கதிர்வீச்சு, மின்சாரம், காந்தவியல் போன்றவைகள் இயற்கைச் சூழலில் பெரும் தாக்கத்தை உருவாக்குகின்றன. இவற்றின் தோற்றப்பாடுகளும், அண்டத்தின் இயற்கைவளப் பயன்பாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் பெருமளவு இன்று ஆராயப் படுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Johnson, D. L.; Ambrose, S. H.; Bassett, T. J.; Bowen, M. L.; Crummey, D. E.; Isaacson, J. S.; Johnson, D. N.; Lamb, P. et al. (1997). "Meanings of Environmental Terms". Journal of Environmental Quality 26 (3): 581–589. doi:10.2134/jeq1997.00472425002600030002x. Bibcode: 1997JEnvQ..26..581J.
- ↑ "AP Environmental Science Units: Full List". Retrieved 26 சனவரி 2026.
- ↑ "Environmental Analysis: Definition, Steps, Tools, Examples". Retrieved 26 சனவரி 2026.