இயரெண்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WHL0137-LS (இயரெண்டேல்)
The Sunrise Arc galaxy with lensed star Earendel -b.png
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் மூலம் இயரெண்டேலின் தோற்றம் (30 மார்ச் 2022)
வான்பொருளியக்க அளவியல்
தூரம்6.2±0.1 இன் செம்பிறழ்வு[1] ஒஆ
இயல்புகள்
தோற்றப் பருமன் (F435W)27.2
விவரங்கள் [1]
திணிவு50–100 M
வெப்பநிலை>20,000 கெ

இயரெண்டேல் (Earendel) என அழைக்கப்படும் WHL0137-LS, என்பது மிகவும் தொலைதூரத்தில் அறியப்பட்ட ஓர் ஒற்றை விண்மீன் ஆகும்.[2]

நோக்கல்[தொகு]

2022 மார்ச் 30 இல் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி இயரென்டெல் விண்மீனைக் கண்டுபிடித்ததாக அறிவிக்கப்பட்டது.[1][3] விண்மீன் கொத்தணியின் முன்பாக ஈர்ப்புப் புல ஒளிவிலகல் காரணமாக விண்மீனில் இருந்து ஒளியைக் கணிசமாக அதிகரித்தன் மூலம் இவ்விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது. ஈர்ப்புப் புலவொளிவிலகல் விளைவின் கணினி ஒப்புருவாக்கங்கள் ஏரெண்டலின் ஒளிர்வு ஒன்று முதல் நாற்பதாயிரம் மடங்கு வரை பெரிதாக்கப்பட்டதாகக் கூறுகின்றன.[4] இந்த கண்டுபிடிப்பு புலவொளிவிலகலின் பின்வரும் சாத்தியமான சேர்க்கைகளை நிரூபிக்கிறது: விண்மீன் கொத்தணிகளில் இருந்து ஒரு முக்கிய ஈர்ப்புப் புலவொளிவிலகல், அத்துடன் உள்ளே உள்ள கனமான பொருட்களால் ஏற்படும் மேலதிக ஈர்ப்பு நுண்புலவொளிவிலகல் ஆகியனவாகும்.[5][6]

இந்த விண்மீனுக்கு "இயரெண்டேல்" (Earendel) என்ற பெயர் பண்டைய ஆங்கிலச் சொல் "காலை விண்மீன்" அல்லது "உதயமாகும் ஒளி" என்ற பொருளைக் கொண்ட Aurvandill என்ற சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது.[1][7] இயாரெண்டில் என்பது ஜே. ஆர். ஆர். தோல்கீனின் சில்மாரிலியன் என்ற புனைகதையின் ஒரு பாத்திரத்தின் பெயரையும் குறிக்கும். தோல்கீனைப் பற்றிய குறிப்பு வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பதை நாசா வானியலாளர் மிசேல் தாலர் உறுதிப்படுத்தினார்.[8]

இயல்புகள்[தொகு]

பெருவெடிப்புக்கு 900 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இயரென்டெலில் இருந்து கண்டறியப்பட்ட ஒளி உமிழப்பட்டது. இந்த விண்மீன் 6.2±0.1 செம்பிறழ்வைக் கொண்டதாக அளவிடப்பட்டுள்ளது. அதாவது இவ்விண்மீனில் இருந்தான ஒளி புவியை 12.9 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே வந்தடையும்.[1][9][4] இருப்பினும், அண்டத்தின் விரிவாக்கம் காரணமாக, இவ்விண்மீன் இப்போது 28 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.[10]

இயரெண்டேல் 50-100 வரையான சூரியப் பொருண்மையைக் கொண்டிருக்கலாம், இது சராசரியை விட கணிசமாக அதிகமானதாகும்.[11] அதன் பெரிய திணிவு காரணமாக, இவ்விண்மீன் தோன்றிய சில மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அது சூப்பர்நோவாவாக வெடித்தது.[11][12] இது 20,000 K (19,700 °C; 35,500 °F) பயனுள்ள மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்டிருந்தது.[1] இது கிட்டத்தட்ட முழுவதுமாக ஐதரசனையும், ஈலியத்தையும் கொண்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Welch, Brian (21 January 2022). "A Highly Magnified Star at Redshift 6.2". நேச்சர் 603 (7903): 1–50. doi:10.1038/s41586-022-04449-y. பப்மெட்:35354998. https://www.nature.com/articles/s41586-022-04449-y. பார்த்த நாள்: 30 March 2022. 
 2. 2.0 2.1 Gianopoulos, Andrea (30 March 2022). "Record Broken: Hubble Spots Farthest Star Ever Seen". நாசா. https://www.nasa.gov/feature/goddard/2022/record-broken-hubble-spots-farthest-star-ever-seen. 
 3. "Record Broken: Hubble Spots Farthest Star Ever Seen". Space Telescope Science Institute (நாசா). 30 March 2022. https://hubblesite.org/contents/news-releases/2022/news-2022-003. 
 4. 4.0 4.1 Timmer, John (30 March 2022). "Hubble picks up the most distant star yet observed". நேச்சர் (Ars Technica). doi:10.1038/s41586-022-04449-y. https://arstechnica.com/science/2022/03/hubble-picks-up-the-most-distant-star-yet-observed/. 
 5. Jenkins, Ann; Villard, Ray; Kelly, Patrick (2 April 2018). Hille, Karl (ed.). "Hubble Uncovers the Farthest Star Ever Seen". நாசா. 3 April 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 31 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 6. Di Stefano, Rosanne (2 April 2018). "Cosmic flashing lights". Nature Astronomy (நேச்சர்): pp. 280–281. doi:10.1038/s41550-018-0416-1. https://www.nature.com/articles/s41550-018-0416-1. 
 7. Parks, Jake (30 March 2022). "Hubble spots the farthest star ever seen". Astronomy. https://astronomy.com/news/2022/03/hubble-spots-the-farthest-star-ever-seen. 
 8. Gohd, Chelsea (2022-03-31). "Meet Earendel: Hubble telescope's distant star discovery gets a Tolkien-inspired name". Space.com (ஆங்கிலம்). 31 March 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2022-03-31 அன்று பார்க்கப்பட்டது.
 9. Letzter, Rafi (30 March 2022). "Meet Earendel, the most distant star ever detected". The Verge. https://www.theverge.com/2022/3/30/23002980/earendel-hubble-most-distant-star-gravitational-lensing-jwst. 
 10. Kabir, Radifah (31 March 2022). "Hubble Detects Earendel, The Farthest Star Ever Seen. It's 28 Billion Light Years Away". ABP Live. ABP News. 31 March 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 31 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 11. 11.0 11.1 Konitzer, Franziska (30 March 2022). "Entferntester Stern dank 1000-facher Vergrößerung entdeckt" [சயன்டிஃபிக் அமெரிக்கன்]. Spektrum der Wissenschaft (ஜெர்மன்). 31 March 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 12. Dunn, Marcia (30 March 2022). "This is Earendel, the most distant star ever seen by humans". Los Angeles Times. 30 March 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 31 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயரெண்டேல்&oldid=3520733" இருந்து மீள்விக்கப்பட்டது