இயதாத்ரி அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயதாத்ரி அனல் மின் நிலையம்
Yadadri Thermal Power Plant
நாடுஇந்தியா
நிலைநிறுவப்படுகிறது
உரிமையாளர்TSGENCO

இயதாத்ரி அனல் மின் நிலையம் (Yadadri Thermal Power Plant) இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் இருக்கும் தாமெரசேர்லா மண்டலத்தில் அமையவுள்ள ஒரு மின்னுற்பத்தி நிலையமாகும். தாமெரசேர்லா மண்டலத்தில் வீர்லாபாலெம் கிராமத்தில் 5X800 மெகாவாட் கொள்திறன் அளவுள்ள மின்னுற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை பாரத மிகு மின் நிறுவனத்திற்கு, தெலுங்கானா மின்னுற்பத்தி நிறுவனம் (TSGENCO)வழங்கியுள்ளது.மின்னுற்பத்தி திட்டத்திற்குத் தேவையான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரராகச் செயல்படவும் பாரத மிகு மின் நிறுவனத்திற்கு இவ்வொப்பந்தம் உரிமையளிக்கிறது. 36 மாதங்களுக்குள் இரண்டு அலகுகள் கட்டிமுடிக்கப்பட்டு மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் மீதியுள்ள மூன்று அலகுகள் 48 மாதங்களிலும் கட்டிமுடிக்கப்பட வேண்டுமென்றும் ஒப்பந்தத்தில் கேட்கப்பட்டுள்ளது[1]. மகாரத்னா மதிப்பைப் பெற்றுள்ள பாரத மிகு மின் நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஒப்பந்தத் திட்டமாக இயதாத்ரி அனல் மின் நிலையத் திட்டம் கருதப்படுகிறது[2]


தற்போதைய சுற்று சூழல் நிலைகளை கருத்திற்கொண்டு இயதாத்ரி அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அருகில் உள்ள கிருட்டிணா ஆறு இந்நிலையத்திற்குத் தேவையான தண்ணிரை அளிக்கிறது[3]

நிலை அலகு எண் நிறுவப்படும் கொள்திறன் (மெ.வா) துவக்கம் தற்போதைய நிலை
நிலை I 5 x 800 விரைவில் -

மேற்கோள்கள்[தொகு]