இயக்க விசையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயக்க விசையியல் (Dynamics) ஒரு பொருளின் அசைவுக்கான காரணிகளை ஆயும் இயல். இது இயக்கவியலின் ஒரு பிரிவு, இயக்கவியல் இயற்பியலின் ஒரு பிரிவு.

விசை[தொகு]

முதன்மைக் கட்டுரை: விசை

விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.

நியூட்டனின் இயக்க விதிகள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: நியூட்டனின் இயக்க விதிகள்

பொருளின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை நியூட்டன் உருவாக்கினார். பொருள் மற்றும் அவைகளின் மீது ஒரு விசை ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும்.

முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்க_விசையியல்&oldid=2202272" இருந்து மீள்விக்கப்பட்டது