இயக்குநரின் வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயக்குநரின் வெட்டு என்பது தனியான முறையில் படத்தொகுப்பு செய்யப்பட்ட ஒரு திரைப்படப் பதிப்பு. இது திரையரங்குகளில் காட்டப்படும் பதிப்பில் இருந்து வேறுபடும். திரையரங்கப் பதிப்பு வசூலைக் கருத்திற் கொண்டுப் பரவலர் இரசனைக்கேற்ற படி மாற்றியமைக்கப்படும். இயக்குநரின் வெட்டுப் பதிப்போ இயக்குநர் என்ன சொல்ல நினைத்தாரோ அதே வண்ணம் அமைந்திருக்கும். பொதுவாக இது திரையரங்கப் பதிப்பை விட நீளமாக இருக்கும்.[1][2][3]

சிறப்புப் பதிப்பு என்பது இயக்குநரின் வெட்டைப் போன்றதாகும். பீட்டர் ஜாக்சனின் தி லார்ட் ஆஃப் தி ரிங்சு இதற்கு ஓர் உதாரணம். இது தீவிர இரசிகர்களுக்கென்றே வெளியிடப்பட்டது. இதில் பல சிறப்பு ஒலி ஒளி அம்சங்கள், திரைப்பதிப்பில் இல்லாத பல காட்சிகள் என்று பல அம்சங்கள் இருந்தன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்குநரின்_வெட்டு&oldid=3768937" இருந்து மீள்விக்கப்பட்டது