உள்ளடக்கத்துக்குச் செல்

இயக்கவழங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படம்.1 சுழலும் இயக்கவழங்கிகள் மற்றும் அதைத் தொடரும் பகுதிகள் உருவாக்கும் முன்பின் இயக்கத்தைக் காட்டும் – இயங்கும் படம்.

இயக்கவழங்கி (cam ) அல்லது வணரி என்பது இயக்கவியல் இணைப்பில் சுழலும் அல்லது நழுவும் ஒரு துண்டு ஆகும். குறிப்பாக சுழல் இயக்கத்தை நேரியல் இயக்கமாக அல்லது நேரியல் இயக்கத்தை சுழல் இயக்கமாக மாற்றுவதற்கு இயக்க வழங்கி பயன்படுகிறது.[1][2] பெரும்பாலும் சுழலும் சக்கரங்களின் ஒரு பகுதியாக ( உதாரணம் : மையம் பிறழ்ந்த சக்கரம் ) அல்லது அச்சுத்தண்டாக ( உதாரணம் : ஒழுங்கற்ற வடிவத்துடன் கூடிய ஒரு உருளை) இத்துண்டு செயல்படுகிறது. அதன் வட்டப்பாதையில் ஒரு நெம்புகோலை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளில் தாக்குகிறது. இவ்வியக்க வழங்கியால் ஓர் எளிய பல்லாக இயங்கமுடியும். அவ்வாறு இயங்குகையில் நீராவிச் சம்மட்டிக்குத் ( இது ஒரு உதாரணம் ) தேவையான சக்தி துடிப்புகளை வழங்க இது பயன்படுத்தப்படுகிறது அல்லது பின் தொடரும் பகுதிக்கு முன்னும் பின்னுமான இயக்கத்தை உண்டாக்குகிற ஒரு பிறழ்மைய வட்டு அல்லது வேறு ஏதோ ஒரு வடிவமாக இருக்கிறது. இயக்கவழங்கியை சந்திக்கின்ற அவ்வடிவம் இங்கு ஒரு நெம்புகோல் ஆகும்.

மீள்பார்வை[தொகு]

வட்ட இயக்கத்திலிருந்து தலைகீழான இயக்கத்திற்கு ( சில சமயங்களில் ஊசலாடும் இயக்கத்திற்கு ) மாறியியங்கும் ஒரு சாதனமாக இயக்கவழங்கியை காணமுடியும்.[3] பொதுவாக தானூர்தித் துறையைச் சார்ந்த நெம்புருள்தண்டை இதற்கு பொதுவான உதாரணமாகும். இங்குதான் இயந்திரத்தின் வட்டவியக்கம் மற்றும் அதன் தலைகீழான இயக்கம், உருளைகளின் அடைப்பிதழை உள்ளிழுத்தலையும் வெளியேற்றுதலையும் இயக்குகிறது.

இடப்பெயர்ச்சிப்படம்[தொகு]

படம்.2 அடிப்படையான இடப்பெயர்ச்சி விளக்கப்படம்

சில இயக்கவழங்கிகளை அவற்றின் இடப்பெயர்ச்சிப்படத்தைக் கொண்டு வகைப்படுத்த இயலும். உருளியைப் பின்தொடரும் அமைப்பானது ( இறுதியில் சுழல்சக்கரம் இணைக்கப்பட்ட ஒரு அச்சுத்தண்டு ) இயக்கவழங்கி ஓரச்சில் சுழல்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. இந்த விளக்கப்படங்கள் அந்தநிலையில் நிகழும் ஆர இடப்பெயர்ச்சியை கோண நிலைபாடுடன் ( வழக்கமாக பாகைகளில் ) தொடர்புபடுத்துகிறது. இடப்பெயர்ச்சி விளக்கப்படங்கள் பாரம்பரியமாக எதிர்மறை மதிப்புகள் அல்லாத வரைபடங்களாக இருக்கும் என்று கூறப்படுகின்றன. ஒரு நிலையான திசைவேகத்தில் பின்தொடரும் அமைப்பின் இயக்கம் ஓர் இயந்திர இடைநிறுத்தத்திற்குப் பின் எழுச்சியுடன் அதே திசைவேகத்தில் திரும்புவதை படம் 2 இல் உள்ள எளிய இடப்பெயர்ச்சி விளக்கப்படம் சித்தரிக்கிறது.[4] பின்தொடரும் அமைப்பின் இயக்கம் இயக்கவழங்கியின் மையத்தைவிட்டு விலகிச்செல்லும் போது உயர்ந்தும் இயந்திர இடைநிறுத்தம் அதன் ஓய்வுநிலை என்றும் மற்றும் திரும்புதல் இயக்கவழங்கியை நோக்கிய இயக்கம் என்றும் கொள்ளப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. a cam has four main parts: The cam, shaft, slide and the follower. "cam definition". Merriam Webster. பார்க்கப்பட்ட நாள் 2010-04-05. a rotating or sliding piece (as an eccentric wheel or a cylinder with an irregular shape) in a mechanical linkage used especially in transforming rotary motion into linear motion or vice versa {{cite web}}: Check |url= value (help)
  2. G., Shigley, J., & Uicker, J. (2010). Cam Design. Theory of Machines and Mechanisms (4 ed.). Oxford University Press, USA. p. 200.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Jensen, Preben w. (1965). Cam Design and Manufacture. The Industrial Press, New York. p. 1.
  4. Cam Design and Manufacture. The Industrial Press, New York. p. 8.
  5. Introduction to Mechanisms - Cams"rise is the motion of the follower away from the cam center, dwell is the motion where the follower is at rest, and return is the motion of the follower toward the cam center"

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கவழங்கி&oldid=3721844" இலிருந்து மீள்விக்கப்பட்டது