இம்ரான் தாஹிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்ரான் தாஹிர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மட் இம்ரான் தாஹிர்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 99)பிப்ரவரி 24 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் இருபது20
ஆட்டங்கள் 12 12 165 120
ஓட்டங்கள் 90 5 2,222 312
மட்டையாட்ட சராசரி 11.25 2.00 14.15 12.36
100கள்/50கள் 0/0 0/0 0/4 0/0
அதியுயர் ஓட்டம் 29* 1* 77* 41*
வீசிய பந்துகள் 2,481 615 32,811 5,204
வீழ்த்தல்கள் 34 26 681 177
பந்துவீச்சு சராசரி 42.20 17.15 26.14 22.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 48 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 10 n/a
சிறந்த பந்துவீச்சு 5/32 4/38 8/76 5/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 5/– 69/– 27/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, திசம்பர் 7 2013

முகம்மது இம்ரான் தாஹிர் (உருது: عمران طاہر; பிறப்பு: மார்ச்சு 27, 1979) பாக்கிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட, தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். வலதுகை புறத்திருப்பம் பந்து வீச்சாளரான இவர் வலதுகை மட்டையாளரும் ஆவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக பாக்கித்தான் சூப்பர் லீக்கிலும், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக கரீபியன் பிரீமியர் லீக்கிலும், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

சூன் 15, 2016 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 7 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 58 ஆவது போட்டியில் ஒருநாள் போட்டிகளில் தனது 100 ஆவது இலக்கினைக் கைப்பற்றினார். இதன்மூலம் விரைவாக 100 இலக்குகளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[1]

பெப்ரவரி 17, 2017 இல் விரைவாக பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விரைவாக 50 இலக்குகளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். மார்ச் 4, 2017 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் மிகக் குறைவான சராசரியுடன் பந்துவீசிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[2]

சர்வதேச போட்டிகள்[தொகு]

இம்ரான் தாஹிர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் அணியில் இவர் இடம்பெறவில்லை.

நவம்பர், 2011 ஆம் ஆண்டில் கேப் டவுனில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இதன்பின் அணியில் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.பின் 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் நாளில் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். பின் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் 12 இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 10.91 ஆகும்.

தாஹிர் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பிடித்தார்.[3] அதற்கு முந்தைய இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவரின் பெயர் இடம்பெறிருந்தது. ஆனால் விளையாடும் அனியில் இவரின் பெயர் இடம்பெறவில்லை. இதனைப் பற்றி கிரயெம் சிமித் கூறும்போது தாஹிரைப் பற்றி மற்ற அணிவீரர்கள் போதுமான அளவு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அணியில் சேர்க்கவில்லை எனக் கூறினார்.[4] பெப்ரவரி 24,பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 4 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.[5]

சான்றுகள்[தொகு]

  1. "Tahir, Amla lead South Africa to another bonus-point win". ESPNcricinfo. 15 June 2016. http://www.espncricinfo.com/tri-nation-west-indies-2016/content/story/1026737.html. பார்த்த நாள்: 16 June 2016. 
  2. "Tahir tops economy rates for South African spinners". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/india-v-australia-2016-17/content/story/1085193.html. பார்த்த நாள்: 4 March 2017. 
  3. "Tahir and van Wyk picked for World Cup – Yahoo! Eurosport". Uk.eurosport.yahoo.com. http://uk.eurosport.yahoo.com/19012011/28/tahir-van-wyk-picked-world-cup.html. பார்த்த நாள்: 4 January 2014. 
  4. Moonda, Firdose (24 January 2011). "South Africa roll the dice game". கிரிக்இன்ஃபோ. http://www.espncricinfo.com/southafrica/content/current/story/498172.html. பார்த்த நாள்: 24 January 2011. 
  5. "South Africa vs West Indies, ICC World Cup 2011". Cricket Archives. http://iccworld-cup2011.blogspot.com/2011/02/west-indies-vs-south-africa-delhi-24th.html. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_தாஹிர்&oldid=3280835" இருந்து மீள்விக்கப்பட்டது