உள்ளடக்கத்துக்குச் செல்

இம்பி சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்பி சாலை
Imbi Road
Jalan Imbi

முக்கிய சந்திப்புகள்
வடகிழக்கு முடிவு:புக்கிட் பிந்தாங் சாலை
 புக்கிட் பிந்தாங் சாலை; கோலாலம்பூர் உள்வட்டச் சாலை; (சுல்தான் இஸ்மாயில் சாலை)
தென்மேற்கு முடிவு:இம்பி மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு

இம்பி சாலை (ஆங்கிலம்; Imbi Road; மலாய்: Jalan Imbi) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் நகர மையத்தில் உள்ள ஒரு முக்கிய சாலையாகும். கோலாலம்பூர் மாநகரின் மைய வணிக மாவட்டமான தங்க முக்கோணத்தின் தெற்கு எல்லையை இந்தச் சாலை உருவாக்குகிறது.[1]

கிழக்கு முனையில், தங்க முக்கோணத்தில் தொடங்கி பின்னர் புக்கிட் பிந்தாங் சாலையுடன் சந்திக்கிறது. இந்தச் சாலைக்கு சார்ஜென்ட் இம்பி பின் சீடின் (Sergeant Imbi bin Seedin) என்பவரின் பெயர் சூட்டப்பட்டது.[2]

இம்பி சீடின்

[தொகு]

சார்ஜென்ட் இம்பி பின் சீடின் தொடக்கக்கால கோலாலம்பூரில் ஒரு குறிப்பிடத்தக்க நபராக இருந்தார். குறிப்பாக காவல் படையில் அவர் ஆற்றிய சேவைக்காகவும், தற்போது இம்பி சாலை மற்றும் புடு சாலை சந்திப்பில் அவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட இடத்தில் உள்ள அவரின் இல்லத்திற்காகவும் அறியப்படுகிறார்.

1845-ஆம் ஆண்டில் பிறந்த அவர், தம்முடைய 16 வயதில் காவல் படையில் சேர்ந்து; பின்னர் தலைமை பூர்வீகக் காவலர் பதவிக்கு உயர்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில் இம்பி பகுதியின் உள்ளூர்ச் சமூகத்திற்கு பொதுநலச் சேவைகளைச் செய்தார்.[2]

வழித்தடம்

[தொகு]

இம்பி சாலை, தென்மேற்கு-வடகிழக்கு திசையில், புடு சாலை சந்திப்பிலிருந்து (புது சிறைச்சாலையின் முன்னாள் தளத்திற்கு அருகில்), கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம், இம்பி மோனோரெயில் நிலையம் மற்றும் பார்க்ரோயல் விடுதி வழியாகச் செல்கிறது.

பின்னர் புக்கிட் பிந்தாங் சாலைச் சந்திப்பில், மலேசிய பாதுகாப்பு படைகளின் நிதி வாரியத்தின் தலைமையகத்திற்கு முன்னால் முடிவடைகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jalan Imbi is a major road in the heart of Kuala Lumpur. It forms the southern boundary of the Golden Triangle, the central business district of the city. On the eastern end, Jalan Imbi starts and the junction with Jalan Bukit Bintang". Penang Travel Tips (in ஆங்கிலம்). Retrieved 3 October 2025.
  2. 2.0 2.1 "Jalan Imbi is named after Sergeant Imby bin Seedin, who joined the police force at the early age of 16 and later appointed as as Chief Native Warder in Malacca". Kuala Lumpur City. 27 June 2022. Retrieved 3 October 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பி_சாலை&oldid=4356898" இலிருந்து மீள்விக்கப்பட்டது