இம்பா (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா (Ba) ஃபிஜி நாட்டில் உள்ள நகரம். இது நந்தி நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு விவசாயமே முக்கியத் தொழில் ஆகும். இந்தியர்கள் இப்பகுதியில் அதிகம் வாழ்கின்றனர். தமிழர்களும் அடக்கம். கரும்பு அதிகம் பயிரிடப்படும் பயிர். பிஜித் தீவின் 14 மாகாணங்களில் ஒன்றான பா மாகாணத்திற்குள் இந்நகரம் அமைந்துள்ளது. இதன் தற்போதைய நகர்மன்றத் தலைவராக பிரவீண் பாலா உள்ளார். இந்நகரில் பிரபலமான கால்பந்தாட்ட மைதானம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பா_(நகரம்)&oldid=2084842" இருந்து மீள்விக்கப்பட்டது