இம்பா மாகாணம்
இம்பா மாகாணம் பிஜி நாட்டின் விட்டிலிவு தீவின் வடமேற்கில் அமைந்துள்ளது. இது பிஜி நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமாகவும் நிலப்பரப்பில் இரண்டாவது பெரிய மாகாணமாகவும் திகழ்கிறது. இம்மாகாணத்தில் இம்பா, மகோடுரோ, நந்தி, நவாகா, தவுவா, வுண்டா, விட்டோகோ ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.
இம்மாகாணம் மாகாண சபையினால் ஆளப்படும். பிஜியின் தற்போதைய தலைவர் இம்பா மாகாணத்தைச் சேர்ந்தவர்.
மக்கள்[தொகு]
இங்கு 231,760 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 118,087 பேர் ஆண்கள், 113,673 பெண்கள் ஆவர். 96,852 பிஜியர்களும், 126,142 பிஜி இந்தியர்களும், 8,766 ஏனைய மக்களும் வாழ்கின்றனர். [1]