இமோகோலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமோகோலைட்டு
Imogolite
பொதுவானாவை
வகைகளிமண் கனிமம்
வேதி வாய்பாடுAl2SiO3(OH)4
இனங்காணல்
நிறம்வெண்மை,நீலம்,பச்சை,பழுப்பு,கருப்பு
படிக இயல்புசங்குருவம் நூண்ணிய நூல் மற்றும் குழல்கள் போன்ற துகள்களாலானது
படிக அமைப்புநாற்கோணம்
அறியாத இடக்குழு
மோவின் அளவுகோல் வலிமை2-3
மிளிர்வுபளபளப்பான மெழுகு மற்றும் பிசின்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி2.7
ஒளியியல் பண்புகள்சமவியல்பு
ஒளிவிலகல் எண்n=1.47-1.51
மேற்கோள்கள்[1][2][3]

இமோகோலைட்டு (Imogolite) என்பது Al2SiO3(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அலுமினியம் சிலிக்கேட்டு களிமண் கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. எரிமலைச் சாம்பலிலிருந்து தோன்றும் மண்ணில் இக்கனிமம் காணப்படுகிறது. முதன் முதலில் சப்பான் நாட்டின் கையூசு மாகாணத்தில் 1962 ஆம் ஆண்டு இமோகோலைட்டு கண்டறியப்பட்டது. சப்பானிய மொழியில் பழுப்பு மஞ்சள் நிற மண் என்ற பொருள் கொண்ட இமோகோ என்ற சொல்லிலிருந்து இமோகோலைட்டு என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது[1]. அல்லோபேன், குவார்ட்சு, கிரிசுட்டோபேலைட்டு, கிப்சைட்டு, வெர்மிகியுலைட்டு, லிமோனைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இக்கனிமமும் காணப்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]


மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமோகோலைட்டு&oldid=2660338" இலிருந்து மீள்விக்கப்பட்டது