இமேக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமேக்சு
உருவாக்குனர்David A. Moon, Guy L. Steele, Jr.
தொடக்க வெளியீடு1976; 48 ஆண்டுகளுக்கு முன்னர் (1976)[1][2]
மொழிLisp, C
இயக்கு முறைமைTECO (text editor), பன்னியக்குதளம், Unix-like
மென்பொருள் வகைமைஉரைத்தொகுப்பி


இமேக்சு(Emacs) என்பது லினக்சு வகைக் கணினிகளில் பயன்படுத்தப்படும், ஒரு உரைத்தொகுப்பி ஆகும். 1970ஆம் ஆண்டின் நடுவில், இதற்கான நிரலாக்கம் தொடங்கப்பட்டது. இதன் சிறப்புத்தன்மை யாதெனில், இதிலிருந்து பல இமேக் உரைத்தொகுப்பித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.[3] அதில் முக்கியமானது, குனூ இமேக் ஆகும். அது இன்றளவும் வளர்ந்து, மேம்படுத்தப்பட்டு வருகிறது.[4] இதன் நிரலாக்கம் 10,000க்கும் மேற்பட்ட வரிகளைக்கொண்டிருந்தாலும், அவை பயனர்களால், ஒருங்கிணைக்கப்பட்டு, பெருமகட்டளைகளாக செவ்வனே இன்றளவும் இயக்கப்பட்டு வருகின்றன. இதைக்கற்பது சற்று கடினம் எனினும், இதன் பயன்பாடு அளப்பரியது.

சிறப்பியல்புகள்[தொகு]

  • இம்மென்பொருளானது, குனூ பொதுமக்கள் உரிமம்(GPL) உரிமத்தின் கீழ் வெளிவந்த முதல் மென்பொருள் ஆகும். இந்த உரிமத்தினையும், இந்த மென்பொருளையும் உருவாக்கியவர் இரிச்சர்ட் சுடால்மன் என்ற கணினியியல் அறிஞரே ஆவார்.
  • இது வெறும் உரைதிருத்தி /உரைத்தொகுப்பி மட்டுமல்ல. அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்ல திறன்களைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள் எனலாம்.எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, நிழற்படக்கோப்பு வடிவங்கள் (JPEG, PNG), பிடிஎப் ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளையுத் கையாள வல்லதாகும். இவ்வகையானக் கோப்புகளைப் பார்ப்பதும், திருத்துவதும், இதன் சிறு பகுதி திறன் தான்.
  • இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், 'கிட்'களைக் (git-version control system) கையாளலாம், முனையத்தைப் (terminal) பயன்படுத்தலாம். மேலும் நாள்காட்டி, கணிப்பான்(calculator), விளையாட்டுகள் எனப் பல வசதிகளைப் பெற்றிருக்கிறது.

பயன்படுத்தும் முறைமை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Emacs Release Dates".
  2. Zawinski, Jamie (2018-01-25) [1999]. "Emacs Timeline". பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
  3. "A Tutorial Introduction to GNU Emacs". For an editor to be called "emacs" the main requirement is that it be fully extensible with a real programming language, not just a macro language.
  4. "GNU Emacs Pocket Reference". GNU Emacs is the most popular and widespread of the Emacs family of editors.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமேக்சு&oldid=3042831" இலிருந்து மீள்விக்கப்பட்டது