உள்ளடக்கத்துக்குச் செல்

இமினோபோரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமினோபோரேன்

இமினோபோரேன் (மூலச் சேர்மம்)
பெயர்கள்
வேறு பெயர்கள்
போரேனிமைன்
Boraneimine
இனங்காட்டிகள்
15119-97-8 (HB=NH) Y
InChI
  • InChI=1S/BH2N/c1-2/h1-2H
    Key: LNLSXDSWJBUPHM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 102382766
  • B=N
பண்புகள்
BH2N
வாய்ப்பாட்டு எடை 26.83 g·mol−1
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
tBuN=B-tBu (tBu = டெர்ட்-பியூட்டைல்) சேர்மத்தின் கட்டமைப்பு B-N பிணைப்பு தூரம் 126 பைக்கோமீட்டர் ஆகும்

இமினோபோரேன்கள் (Iminoboranes) என்பவை RB=NR' என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமபோரான் சேர்மங்களின் ஒரு குழுவாகும். இவை மின்னணு ரீதியாக அசிட்டிலீன்களுடன் தொடர்புடையவை, ஆனால் முனைவுத்தன்மையின் காரணமாக பொதுவாக அதிக வினைத்திறன் கொண்டவையாக இருக்கின்றன.[1][2]

தயாரிப்பு

[தொகு]

புளோரோ- அல்லது குளோரோசிலேன்களை நீக்குவது நன்கு சோதிக்கப்பட்ட ஒரு வழியாகும். (Me3Si)3Si போன்ற பருமனான பதிலீடுகள், சில்படிகமாக்கலைப் பொறுத்து இமினோபோரேனை நிலைப்படுத்துகின்றன.[3]

(Me3Si)3SiB(F)−N(SiMe3)2 → (Me3Si)3Si−B=N−SiMe3 + F−SiMe3

அசிட்டோபோரேன்களின் வெப்பச் சிதைவானது, போரானிலிருந்து புதிதாக உருவாகும் நைட்ரீனுக்கு 'R' தொகுதியின் இடம்பெயர்வைத் தூண்டி, இமினோபோரேன்களைத் தருகிறது.[4]

R2B−N3 → RB=NR + N2

கட்டமைப்பும் பிணைப்பும்

[தொகு]

அடிப்படை மூல இமினோபோரேனான HB=NH, H3BNH3-இன் ஒளிச்சிதைவு மூலம் உருவாக்கப்படுகிறது.[5][6][7] இமினோபோரேன்களில் உள்ள பிணைப்பை இரண்டு உடனிசைவு அமைப்புகள் மூலம் விவரிக்கலாம்:[8]

R−B⊖≡N⊕−R⟷R−B=N¨−R

டெர்ட்-பியூட்டைல் ​​போன்ற பருமனான பதிலீட்டுக் குழுக்கள் நிலைப்புத்தன்மையை வியத்தகு முறையில் அதிகரிக்கக்கூடும். தனிமைப்படுத்தக்கூடிய ஒரு இமினோபோரேன் சேர்மம் (CH3)3C−B−≡N+−C(CH3)3 ஆகும்..[9]

எளிய போரான்-நைட்ரசன் ஐதரைடுகளில் பிணைப்பு நீளங்களின் ஒப்பீடு
மூலக்கூறு அம்மோனியா போரேன்[10] அமினோபோரேன்[11] இமினோபோரேன்[12]
மூலக்கூற்று வாய்ப்பாடு BNH6 BNH4 BNH2
வகுப்பு அமீன் போரேன் அமினோபோரேன் இமினோபோரேன்
ஒப்புமை ஐதரோகார்பன் ஈத்தேன் எத்திலீன் அசிட்டிலீன்
ஒப்புமை ஐதரோகார்பன் வகுப்பு ஆல்க்கேன் ஆல்க்கீன் ஆல்க்கைன்
கட்டமைப்பு
பந்து குச்சி மாதிரி
போரான் நைட்ரசன் கலப்பு sp3 sp2 sp
B-N பிணைப்பு நீளம் 1.658 Å 1.391 Å 1.238 Å
B-N ஒற்றைப் பிணைப்பு விகிதம் 100% 84% 75%
B-H பிணைப்பு நீளம் 1.216 Å 1.195 Å
N-H பிணைப்பு நீளம் 1.014 Å 1.004 Å
கட்டமைப்பு உறுதிபடுத்தும் முறை சுழற்சி நிறமாலையியல் நுண்ணலை நிறமாலையியல் அகச்சிவப்பு நிறமாலையியல்

வினைத்திறன்

[தொகு]

சில்படிமமாக்கல்

[தொகு]

இமினோபோரேன்கள் பெரும்பாலும் வளைய வழிப்பொருட்களை உருவாக்கும் வகையில் சில்படிகமாக்கம் அடையும் இயல்புடையவை. பருமனான பதிலீட்டுக் குழுக்கள் இவ்வினையைத் தடுக்கக்கூடும். இதில் ஐந்து வகையான சில்படிகமாக்கும் விளைபொருட்கள் உருவாகின்றன:

வளையையிருபடிகள் (1,3-டையாசா-2,4-டைபோரெட்டிடின்கள்),[9]Di[13]) வளைய முப்படிகள்(போரசீன்கள்), Tr, இருவளையமுப்படிகள் Tr′, வளையநாற்படிகள், Te [14]) மற்றும் பலபடிகள் (பாலி இமினோபோரேன்கள்), Po என்பவை அந்த ஐந்து வகைகளாகும். இவை கீழே காட்டப்பட்டுள்ளன.[15] எந்த விளைபொருள் முதன்மையாக உருவாகிறது என்பது வினைபடுபொருட்களின் அமைப்பு மற்றும் வினை நிகழும் சூழலைப் பொறுத்தது. இவ்வகை விளைபொருட்களில் சிலவற்றை ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்ளவும் முடியும்.[16]

கூட்டுவினைகள்

[தொகு]

புரோட்டான் தரக்கூடிய காரணிகளைச் சேர்க்கும் வினை விரைவானது மற்றும் முழுமையானது ஆகும்.[17] இமினோபோரேன்களின் போரேற்றம் என்பது B≡N பிணைப்பில் B-X ஒற்றைப் பிணைப்பைச் சேர்க்கும் வினையாகும். இதில் -X என்பது -Cl (குளோரோ-போரேற்றம்), -N3 (அசைடோ-போரேற்றம்), -SR (தயோ-போரேற்றம்), -NR2 (அமினோ-போரேற்றம்) அல்லது R (அல்கைல்-போரேற்றம்) ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். இவ்வினைகளில் ஒன்று இங்கே விளக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரான்-செறிந்த சில இமினோபோரேன்கள் லூயிசு அமிலங்களுடன் கூட்டுப் பொருட்களை உருவாக்குகின்றன.[18]

வளையக் கூட்டு வினைகள்

[தொகு]

வழக்கமான [2+3]-வளையக் கூட்டு வினை என்பது, B≡N மற்றும் RN3 ஆகியவற்றைச் சேர்த்து BN4 வளையத்தை உருவாக்கும் வினையாகும். பரவலாக ஆராயப்பட்ட [2+2]-வளையக் கூட்டு வினைகளில் ஒன்று, ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களுக்கு இடையிலான வினையாகும்.

இடைநிலை உலோகங்களுடனான ஒருங்கிணைப்பு

[தொகு]

அல்கைன்களைப் போலவே, இமினோபோரேன்களும் இடைநிலை உலோகங்களுடன் பிணைப்பை ஏற்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Inorganic ring systems: 7th International symposium: Papers. Chivers, Tristram. Gordon and Breach Science Publishers. 1994. ISBN 978-2-88449-168-6. OCLC 81135356.{{cite book}}: CS1 maint: others (link)
  2. ↑ Paetzold, Peter (1987). Iminoboranes. Advances in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Vol. 31. pp. 123–170. doi:10.1016/s0898-8838(08)60223-8. ISBN 978-0-12-023631-2.
  3. ↑ Haase, Martin; Klingebiel, Uwe (1985-04-01). "Simple Synthesis of Stable Iminoboranes" (in en). Angewandte Chemie International Edition in English 24 (4): 324. doi:10.1002/anie.198503241. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3773.
  4. ↑ Paetzold, Peter; Eleftheriadis, Eleftherios; Minkwitz, Rolf; Wölfel, Volker; Gleiter, Rolf; Bischof, Peter; Friedrich, Gert (1988-01-01). "Bildung, Struktur und Reaktionen von Methyl(methylimino)boran" (in en). Chemische Berichte 121 (1): 61–66. doi:10.1002/cber.19881210110. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0682.
  5. ↑ Lory, Earl R.; Porter, Richard F. (1973-03-01). "Infrared studies of matrix isolated species in the hydrogen-boron-nitrogen system". Journal of the American Chemical Society 95 (6): 1766–1770. doi:10.1021/ja00787a012. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. Bibcode: 1973JAChS..95.1766L. https://archive.org/details/american-chemical-society-journal_1973-03-21_95_6/page/1766.
  6. ↑ Paetzold, Peter; Richter, Anette; Thijssen, Theo; Würtenberg, Stefan (1979-12-01). "Bildung, Struktur und Reaktivität von (Pentafluorphenyl)bor-tert-butylimid und seinem Cyclodimeren" (in en). Chemische Berichte 112 (12): 3811–3827. doi:10.1002/cber.19791121207. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0682.
  7. ↑ Paetzold, Peter; von Plotho, Christoph (1982-08-01). "Über weitere monomere Borimide und ihre Reaktionen" (in en). Chemische Berichte 115 (8): 2819–2825. doi:10.1002/cber.19821150813. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0682.
  8. ↑ Mó, Otilia; Yáñez, Manuel; Pendás, Angel Martín; Bene, Janet E. Del; Alkorta, Ibon; Elguero, José (2007-07-23). "Unusual substituent effects on the bonding of iminoboranes" (in en). Phys. Chem. Chem. Phys. 9 (30): 3970–3977. doi:10.1039/b702480k. பன்னாட்டுத் தர தொடர் எண்:1463-9084. பப்மெட்:17646885. Bibcode: 2007PCCP....9.3970M. http://xlink.rsc.org/?DOI=B702480K.
  9. 1 2 Paetzold, Peter; Plotho, Christoph Von; Schmid, Günter; Boese, Roland; Schrader, Bernhard; Bougeard, Daniel; Pfeiffer, Uwe; Gleiter, Rolf et al. (1984). "Darstellung, Reaktionen und Struktur vontert-Butyl(tert-butylimino)boran". Chemische Berichte 117 (3): 1089–1102. doi:10.1002/cber.19841170324.
  10. ↑ Thorne, L. R.; Suenram, R. D.; Lovas, F. J. (1983). "Microwave spectrum, torsional barrier, and structure of BH3NH3". J. Chem. Phys. 78 (1): 167–171. doi:10.1063/1.444528. Bibcode: 1983JChPh..78..167T.
  11. ↑ Sugie, Masaaki; Takeo, Harutoshi; Matsumura, Chi (1987). "Microwave spectrum and molecular structure of aminoborane, BH2NH2". J. Mol. Spectrosc. 123 (2): 286–292. doi:10.1016/0022-2852(87)90279-7. Bibcode: 1987JMoSp.123..286S.
  12. ↑ Kawashima, Yoshiyuki (1987). "Detection of HBNH by infrared diode laser spectroscopy". J. Chem. Phys. 87 (11): 6331–6333. doi:10.1063/1.453462. Bibcode: 1987JChPh..87.6331K.
  13. ↑ Hess, H. (1969-11-15). "Strukturbestimmungen an Bor–Stickstoff-Verbindungen. IV. Die Kristall- und Molekularstruktur von Hexakis(trimethylsilyl)-2,4-diamino-1,3,2,4-diazadiboretidin" (in de). Acta Crystallographica Section B 25 (11): 2342–2349. doi:10.1107/s056774086900567x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1969AcCrB..25.2342H. http://journals.iucr.org/b/issues/1969/11/00/a06979/a06979.pdf.
  14. ↑ Turner H. S. and Warne R. J. 1962 Proc. Chem. Soc. 69.
  15. ↑ Advances in inorganic chemistry. Volume 31. Emeléus, H. J. (Harry Julius), Sharpe, A. G. New York: Academic Press. 1987. ISBN 978-0-12-023631-2. OCLC 277086713.{{cite book}}: CS1 maint: others (link)
  16. ↑ Maier.G. (1978). "Tetra-tert-butyltetrahedrane". Angew. Chem. Int. Ed. Engl. 17 (7): 520–521. doi:10.1002/anie.197805201.
  17. ↑ Nöth, Heinrich; Weber, Siegfried (1985-05-01). "Beiträge zur Chemie des Bors, 154. Addition von Trimethylsily-Verbindungen und von anderen Elektrophilen an (tert-Butylimino) (tetramethylpiperidino)boran" (in en). Chemische Berichte 118 (5): 2144–2146. doi:10.1002/cber.19851180536. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0682.
  18. ↑ Nöth, Heinrich; Weber, Siegfried (1985-06-01). "Beiträge zur Chemie des Bors, 158. Addukte von Aluminium- und Galliumhalogeniden an ein Aminoiminoboran" (in en). Chemische Berichte 118 (6): 2554–2556. doi:10.1002/cber.19851180631. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0682.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமினோபோரேன்&oldid=4707080" இலிருந்து மீள்விக்கப்பட்டது