இமிடிக் அமிலம்

இமிடிக் அமிலம் (Imidic acid) கரிம வேதியியலில், இமிடிக் அமிலங்கள் என்பவை RC(−OH)=NR' என்ற கட்டமைப்பைக் கொண்ட கரிமச் சேர்மங்களாகும்.[1] இவை மூன்றாம் நிலை அல்லாத அமைடுகளுடன் (RC(=O)−NHR') இயங்குச்சமநிலை மாற்றியமாகவும் ஆக்சைம்களுடன் (RR'C=N−OH) சமநிலை கொண்டவையாகவும் உள்ளன.
"இமினோ அமிலம்" என்ற சொல் இந்தத் தொகுதிக்குரிய ஒரு வழக்கொழிந்த சொல்லாகும்; இதற்கு வேறுபட்ட மூலக்கூறு அமைப்பு இருப்பதால், இந்தச் சூழலில் இதை பயன்படுத்தக்கூடாது.[2]
ஆரம்பநிலை அமினோ ஆல்ககால்களை உலோக வினையூக்கியின் உதவியுடன் ஐதரசன் நீக்கம் செய்வதன் மூலம் இமிடிக் அமிலங்களை உருவாக்கலாம். உதாரணமாக, அமினோ ஆல்ககால்களின் மூலச் சேர்மமான மெத்தனால் அமீனை ஐதரசன் நீக்கம் செய்வதன் மூலம், இமிடிக் அமிலங்களின் மூலச் சேர்மமான மெத்தனிமிடிக் அமிலத்தைப் பெறலாம்.
- H2NCH2OH → HNCHOH + H2 (பார்மமைடின் இயங்குச் சமநிலை மாற்றியம்)
பக்கச் சங்கிலிகளைக் கொண்ட ஆரம்பநிலை அமினோ ஆல்ககால்கள், அதே பக்கச் சங்கிலிகளைக் கொண்ட இமிடிக் அமிலங்களை உருவாக்குகின்றன:
- H2NCHROH → HNCROH + H2
இமிடிக் அமிலங்களை உருவாக்கும் மற்றொரு வழி, கார்பாக்சிலிக் அமிலங்களை அசனோனுடன் வினைபுரியச் செய்வதாகும். உதாரணமாக, கார்பாமிக் அமிலத்திற்கான வினை பின்வருமாறு:
- H2NCOOH + HNO → H2NCNHOH + O2 (யூரியாவின் இயங்குச் சமநிலை மாற்றியம்]]
மேலும், பதிளிடு செய்யப்பட்ட இமிடிக் அமிலங்களுக்கான பொதுவான வினை:
- RCOOH + R'NO → RCNR'OH + O2
மற்றொரு வழிமுறை, கார்பாக்சிலிக் அமிலங்கள் ஈரசீன் அல்லது பிற அசோ சேர்மங்களுடன் வினைபுரிந்து, அசோனோனை உருவாக்குவதாகும்.
- RCOOH + HNNH → RCNHOH + HNO
இமிடிக் அமிலங்கள், ஆக்சிசன் அணுவிலிருந்து நைட்ரசன் அணுவிற்கு ஐதரசன் இடமாற்றம் அடைவதன் மூலம் அமைடுகளாக மாற்றமடைகின்றன. ஆக்சிசன் அல்லது நீர் உள்ள சூழலில் அமைடுகள் அதிக நிலைத்தன்மை கொண்டவை. அதே சமயம் அம்மோனியா அல்லது மீத்தேன் உள்ள கரைசலில் இமிடிக் அமிலங்கள் சமநிலையை ஆதிக்கம் செலுத்துகின்றன.
- HNCHOH ⇌ HCONH2
- RNCR'OH ⇌ R'CONHR
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Imidic acids". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Imino acids". Compendium of Chemical Terminology Internet edition.