உள்ளடக்கத்துக்குச் செல்

இமிடசோலைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-, 3-, மற்றும் 4-இமிடசோலைன்களின் அமைப்பு

இமிடசோலைன் (Imidazoline) என்பது C3H6N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இமிடசோல் சேர்மத்தில் உள்ள இரண்டு இரட்டைப் பிணைப்புகளில் ஒன்றை ஒடுக்குவதன் மூலம் இமிடசோலைன் வருவிக்கப்படுகிறது. பல்லினவளையச் சேர்மங்களில் இமிடசோலைனும் ஒரு வகைச் சேர்மமாகும். 2-இமிடசோலைன்கள், 3-இமிடசோலைன்கள் மற்றும் 4-இமிடசோலைன்கள் என்ற மூன்று மாற்றியன்களை இமிடசோலைன் கொண்டுள்ளது. 2- மற்றும் 3- இமிடசோலைன்கள் அவற்றின் மூலக்கூற்று அமைப்பில் ஒரு இமைன் மையத்தைக் கொண்டுள்ளன. ஆனால் 4-இமிடசோலைன்கள் அவற்றின் அமைப்பில் ஓர் ஆல்க்கீன் தொகுதியைப் பெற்றுள்ளன. பல்வேறு மருந்துப் பொருட்களில் 2- இமிடசோலைன் தொகுதி் காணப்படுகிறது[1]

இமிடசோல் அதன் ஒடுக்கப்பட்ட வழிப்பொருள் ஆகியவற்றுக்கு இடையிலான வேதியியல் தொடர்பு


மேற்கோள்கள்

[தொகு]
  1. Liu, H. and Du, D.-M. (2009), Recent Advances in the Synthesis of 2-Imidazolines and Their Applications in Homogeneous Catalysis. Adv. Synth. Catal., 351: 489–519. doi: 10.1002/adsc.200800797
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமிடசோலைன்&oldid=2124134" இலிருந்து மீள்விக்கப்பட்டது