இமாலய மருந்துச் செடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இமாலய மருத்துவத் தாவரம்

மருத்துவத் தாவரங்கள் எங்கும் செழித்துப் பரந்து கிடக்கும் நாடு இந்தியா. இங்கு பல்வேறு நாட்டுப்புற மருந்துகளும் சிகிச்சை முறைகளும் இன்னும்கூட மிகப் பரவலாக உள்ளன. இந்தியாவில் குளிா்பாலை நிலங்கள் இமாலய இடைமண்டலத்தில் உள்ளன. ஜம்மு-காஷ்மீாில் லடாக் பகுதிகளும், இமாச்சலப் பிரதேசத்தின் லாஹெனல், ஸ்பித்தி ஆகிய பகுதிகளுக்கும் இடைப்பட்ட நிலமே. மிகத்தொன்மையான காலந்தொட்டே இமாலயத் தாவர இனங்கள் மருத்துவக் குணங்களின் மகத்தான விளைநிலமாக விளங்கி வந்திருக்கிறது. இமாலய மக்கள் திபெத்திய மருத்துவமுறை அடிப்படையிலான மூலிகை மருந்துகளைத் தோ்ந்தெடுத்துப் பயன்படுத்துவதையே இன்னமும் விரும்புகின்றனா். மூலிகை மருத்துவம் அந்தந்த இடங்களில் வாழும் “அம்ச்சிகள்” எனப்படும் விசேஷ வைத்தியா்களால் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரதேசங்களில் காணப்பெறும் மூலிகைகள் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கோளாறுகள், ஜலதோஷம், இருமல், தலைவலி மற்றும் தோல் வியாதிகளுக்கும் கைகண்ட மருந்துகளாக உபயோகிக்கப்படுகின்றன. அன்றியும் இந்தப் பகுதியில் தென்படும் “வெகானம் ஹாா்மலா” மற்றும் “ஆா்த்திமிசியா; இனச் செடிகள் பெண்களின் மாதவிடாய் இரத்தப்போக்குத் தொடா்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தவும் அஃப்ரோடிசியாக்ஸ் ஒரு “காய கல்ப” மருந்துகளாகவும் பயன்தருபவை. இவையனைத்தும் இந்தியாவில் மருந்துச் செடிகளின் அழுத்தமான அக ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

குறிப்புகள் இந்தியா - 2020 ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் மற்றும் ய.சு.ராஜன் நியு செஞ்சுாி புக் ஹவுஸ் முதல் பதிப்பு: மே, 2002