இமாம் தாரிமீ
இமாம் தாரிமீ | |
---|---|
பிறப்பு | 181 இ.நா (கி.பி. 797) சமர்கன்த் [1] |
இறப்பு | 255 இ.நா (869 கி.பி.) |
இனம் | பாரசீகம் |
பணி | இஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர் |
மதப்பிரிவு | இசுலாம் |
ஆக்கங்கள் | சுனன் தாரிமீ |
இமாம் தாரிமீ (Imam Darimi) பாரசீக இஸ்லாமிய அறிஞர், குறிப்பாக முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) ஆவார்.[2] இவர் தொகுத்த சுனன் தாரிமீ ஹதீஸ் நூல் சிறப்பாக உள்ளது.
பிறப்பு
[தொகு]இமாம் தாரிமீ இ.நா 181 ( கி.பி. 797 ) வருடத்தில் பிறந்தார். இவர் சமர்கன்த் என்ற ஊரில் பிறந்த காரணத்தினால் சமர்கன்தீ என்றும் இவர் கூறப்படுகிறார். அப்துர் ரஹ்மான் என்பவர் இவர்களின் தகப்பனாராவார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ்.[3]
இவர் பனூ தாரிமீ என்ற கூட்டத்தைச் சார்ந்தவர்.[4] பனூ தமிம் குலம் காரணமாக இமாம் தமிம் எனவும் அழைக்கப்படுகிறார்.[5]
கல்வி
[தொகு]இமாம் தாரிமீ அவர்கள் நன்கு புத்திக் கூர்மையுள்ளவராக இருந்தார். பல ஆசிரியர்களைச் சந்தித்து கற்றார். இவர் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் தன்னை விட வயதில் கீழ் உள்ளவர்களிடமிருந்தும் கற்றுள்ளார். இவர் தொகுத்துள்ள சுனன் அல் தாரமீ என்ற ஹதீஸ் தொகுப்பு நூல் இவரை ஹதீஸ் வல்லுனராக காட்டுக்கிறது. அறிவிப்பாளர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார்.
கல்விக்காகப் பயனித்த ஊர்கள்
[தொகு]ஹுராஸான், ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், பாக்தாத், வாசித், திமிஷ்க், ஹிமஸ், ஜசீரா, சஃர், ஹிஜாஸ் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.
இவரது ஆசிரியர்கள்
[தொகு]யசீத் பின் ஹாரூன், யஃலா பின் உபைத், ஜஃபர் பின் அவ்ன், பிஷ்ர் பின் உமர், முஹம்மத் பின் பிக்ர், வஹப் பின் ஜரீர், அன்னள்ர் பின் ஷுமைர், உஸ்மான் பின் உமர், சயீத் பின் ஆமிர் மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்துள்ளார்கள்.
இவரது மாணவர்கள்
[தொகு]இமாம் முஸ்லிம், இமாம் அபூதாவூத், இமாம் திர்மிதி, அப்து பின் ஹமைத், அல்ஹசன் பின் சப்பாஹ், முஹம்மத் பின் பஷ்ஷார், முஹம்மத் பின் யஹ்யா இன்னும் பலர் இவருடைய மாணவராக உள்ளார்கள்.
இவரது படைப்புகள்
[தொகு]- சுனன் தாரிமீ
- தப்சீர் அல் தாரமீ [6]
- அல் ஜாமிஆ [7]
இறப்பு
[தொகு]இமாம் தாரிமீ 75 ஆம் வயதில் துல் ஹஜ் மாதம் இ.நா 255 ( கி.பி. 869) இல் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.uga.edu/islam/hadith.html
- ↑ Frye, ed. by R.N. (1975). The Cambridge history of Iran (Repr. ed.). London: Cambridge U.P. p. 471. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-20093-6.
{{cite book}}
:|first1=
has generic name (help) - ↑ (Tahzibul Kamaal – Volume 15 – Page 216)
- ↑ (Lubbul Lubaab – Volume 1 – Page 308)
- ↑ (Al Ansaab – Volume 1 – Page 478)
- ↑ (Sir A'lam al-Nubala - Volume 12 - Page 228)
- ↑ (Ta'rikh al-Baghdad - Volume 10 - Page 29)