இமாம். கவுஸ் மொய்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இமாம். கவ்ய்ஸ் மொய்தீன்

தமிழ்நாட்டில் செங்கற்பட்டு நகரில் பிறந்து வளர்ந்த இமாம், கவுஸ் மொய்தீன் புகுமுகக் கல்வி வரை செங்கற்பட்டிலும், மருத்துவக் கல்வியை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் படித்தார். தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணிபுரிந்த இவர் பின் சவூதி அரேபியாவில், ஜெத்தா நகரில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இமாம்.கவுஸ் மொய்தீன், இறை மொழியன் என்கிற பெயர்களில் கதை, கட்டுரை மற்றும் கவிதைகளை தமிழகத்தில் வெளியாகும் பிரபல தமிழ் இதழ்களிலும், பல தமிழ் இணைய இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், வளைகுடா வாழ் இந்தியத் தமிழர் குழுமம், இந்தியக் கலாச்சாரக் குழுமம் அமைப்புகளில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் "விழியருவிகளும் விமான நிலையங்களும்" என்கிற ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாம்._கவுஸ்_மொய்தீன்&oldid=3234171" இருந்து மீள்விக்கப்பட்டது