உள்ளடக்கத்துக்குச் செல்

இமாம்கஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமாம்கஞ்சு
Imamganj
நகரம்
இமாம்கஞ்சுImamganj is located in பீகார்
இமாம்கஞ்சுImamganj
இமாம்கஞ்சு
Imamganj
இந்தியாவின் பீகாரில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°27′09″N 84°35′05″E / 24.452521°N 84.584727°E / 24.452521; 84.584727
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மண்டலம்மகதம்
கோட்டங்கள்மகத கோட்டம்
மாவட்டம்கயா
ஏற்றம்182 m (597 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
824206
தொலைபேசிக் குறியீடு06331
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.என்-பி.ஆர்
இணையதளம்www.gaya.bih.nic.in

இமாம்கஞ்சு (Imamganj) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கயா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். வட்டாரத் தலைமையாகவும் இந்நகரம் செயல்படுகிறது.[2] மகத்து கோட்டத்தில் உள்ள பீகாரின் சட்டமன்றத் தொகுதியாகவும், அவுரங்காபாத்து மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.[3] பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத் தலைமையகத்திலிருந்து மேற்கே 65 கி.மீ தொலைவில், சார்க்கண்டு மாநில எல்லையில் அமைந்துள்ளது. செர்காட்டியைச் சேர்ந்த இராசா இமாம் பக்சு கானின் பெயரிலிருந்து இந்நகரத்திற்கான பெயர் வந்துள்ளது.

இமாம்கஞ்சு நகரம் 61708.52 சதுர ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. 7 கிராம பஞ்சாயத்துகளும் 195 கிராமங்களும் இந்நகரத்தில் உள்ளடங்கி உள்ளன.[4] 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 951 ஆண்களும் 913 பெண்களும் உட்பட 1,864 என்ற மக்கள் தொகை பதிவு செய்யப்பட்டிருந்தது.[5]

மக்கள் தொகையில் 13 சதவீதம் இசுலாமியர்களாவர்.[6] கிராமப்புற மக்கள் இமாம்கஞ்சில் குடியேறுவதால் நகரத்தின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இமாம்கஞ்சைச் சுற்றியுள்ள இரண்டு ஆறுகள், அதாவது மோர்கர் மற்றும் சோர்கர் ஆறுகள் பாகரில் சந்திக்கின்றன.[7][8]

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், உள்ளூர் வாக்காளர்கள் மாவோயிசுட்டுகளை மீறி அதிக அளவில் வாக்களித்தனர்.[9]

தொழில்முனைவோரும் எழுத்தாளருமான சத்யபால் சந்திரா இமாம்கஞ்சைச் சேர்ந்தவர் ஆவார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maps Imamganj, India". falling rain. Retrieved 2014-06-18.
  2. "Chaudhary elected new Bihar assembly Speaker". Rediff.com. 2005-11-30. Retrieved 2014-06-18.
  3. "Magadh region hogs political limelight". The Times of India. 21 May 2014. Retrieved 2014-06-18.
  4. "Imamganj, Public Health Centre". 16 July 2011. Retrieved 2014-06-18.
  5. "Imamganj". Census of India: Population Finder, Ministry of Home Affairs. Retrieved 2014-06-18.
  6. "Will the Muslim militia polarise community on caste lines in Bihar's Imamganj?". 15 October 2015.
  7. "Maoists blast school building in Bihar's Gaya District". Sify. 2011-03-16. Archived from the original on 2014-07-17. Retrieved 2014-06-18.
  8. Banerjee, Shoumojit (16 June 2011). "Maoists blast six cell towers, torch part of railway station". The Hindu. Retrieved 2014-06-18.
  9. "Villagers defy Maoists in Bihar's Aurangabad to vote". The Times of India. 2014-04-11. Retrieved 2014-06-18.
  10. "On the write track from Maoist land | Deccan Herald". 8 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாம்கஞ்சு&oldid=4404503" இலிருந்து மீள்விக்கப்பட்டது